• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவிலிருந்து ரஜினி அனுதாபம்

By Staff
|

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து அனுதாபச்செய்தி அனுப்பியுள்ளார்.

மூப்பனார் நேற்று காலை 6 மணிக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மரணமடைந்தார்.

மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பித்த போது, அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டுமானால், திமுகவுடன்த.மா.கா. கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் ரஜினி. இதையடுத்து 1996ம் ஆண்டுநடந்த தேர்தலில் அந்தக் கூட்டணிக்காக டிவியில் பிரச்சாரமும் செய்தவர் நடிகர் ரஜினி.

அப்போது முதலே, ரஜினிக்கும் மூப்பனாருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது.

இந்நிலையில், மூப்பனார் இறந்த செய்தி அமெரிக்காவில் இருக்கும் ரஜினிக்குத் தெரிய வந்தது. இதனால், நேரில்வந்து மூப்பனார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாததால், அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளார் ரஜினி.அவர் தனது அனுதாபச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தலைவர் மூப்பனார் தலைசிறந்த மனிதர். எனக்கு மூத்தவராக இருந்தாலும், நல்ல நண்பராகவும் இருந்தார். ஐயாமூப்பனார் அவர்கள் மறைந்த செய்திகேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

நான் இப்போது அமெரிக்காவில் இருப்பதால், நேரில் வந்து அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யமுடியாமல் போனதற்காகவும் மிகவும் வருந்துகிறேன்.

இவ்வாறு ரஜினி தனது அனுதாபச் செய்தியில் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X