35 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்: மாலைக்குள் மீட்கப்படுவான்
சென்னை:
35 அடி ஆழத்தில் விழுந்துள்ள சிறுவன் தமிழ்மணி இன்று மாலைக்குள் மீட்கப்படுவான் என்று தீயணைப்புப் படையினர்தெரிவித்துள்ளனர்.
5 வயதான இந்தச் சிறுவன் போர்வெல் போட்ட தொழிலாளர்களின் அலட்சியத்தால் இதில் விழுந்தான். சாப்பாட்டு அவசரத்தில்அந்தப் பள்ளத்தை ஒரு பேப்பர் போட்டு மூடிவிட்டு அந்தத் தொழிலாளர்கள் சோறு தினனப் போய்விட்டனர்.
அப்போது பள்ளிக் கூடத்திலிருந்து நடந்து வந்த சிறுவன் தவறுதலாக பேப்பர் மீது காலை வைக்க உள்ளே விழுந்தான். 35அடியில் போய் சிக்கிக் கொண்டது அந்தப் பிஞ்சு.
இவனை மீட்க எல் அண்ட் டி நிறுவனம் தோண்டி வரும் சுரங்கத்தில் இன்னும் சில அடிகள் மட்டுமே தோண்டப்படவேண்டியுள்ளது. சுரங்கம் தோண்டத் தோண்ட மண் சரிந்து கொண்டே இருப்பதால், ஒவ்வொரு அடியைத் தோண்டியவுடனும் ஒருசிமெண்ட் உறை வைக்கப்பட்டு வருகிறது.
சிறுவன் உள்ளே மயங்கிய நிலையில் கிடக்கிறான். அவன் சிக்கியுள்ள பள்ளத்துக்குள் தொடர்ந்து டியூப் வழியாக ஆக்ஸிஜன்அனுப்பப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 40 சிலிண்டர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
தவிர ஒரு மருத்துவக் குழுவும் ஒரு ஆம்புலன்சும் தயார் நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ளனர்.
அவனது உடல் நிலையை சில நவீனக் கருவிகளைக் கொண்டு சோதிக்க மருத்துவர்கள் முயன்றனர். ஆனால், இதற்கு அங்குகூடியிருந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அந்த முயற்சியை மருத்துவர்கள் கைவிட்டனர்.
சிறுவன் சிக்கியுள்ள பள்ளத்துக்குள் ஏந்தவிதமான கழிவுநீரும் புகுந்துவிடாத வண்ணம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.இதற்காக அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் அடைக்கப்பட்டுவிட்டன.
ஆனால், ஏதோ ஒரு குடும்பம் தங்கள் வீட்டிலிருந்து கழிவு நீரை வெளியேற்றினர். இந்த நீர் தீயணைப்புப் படையினர் தோண்டிவரும் பள்ளத்துக்குள் கசிந்தது. இதனால் பள்ளம் தோண்டும் பணி பாதிக்கப்பட்டது.
பின்னர் இரவு பகலாக தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்டது. இன்னும் சில அடிகள் முன்னேறினால் அந்தச் சிறுவனைஅடைந்துவிடலாம்.
கிட்டத்தட்ட எல் வடிவில் தீயணைப்புப் படையினர் சுரங்கத்தை அமைத்து வருகின்றனர். சிறுவன் சிக்கியுள்ள பள்ளத்திலிருந்து8 அடி தூரத்தில் 35 அடி அளவுக்கு இந்த சுரங்கம் தோண்டப்பட்டது. 35வது அடியில் இருந்து வளைந்து ஒரு சுரங்கம்தோண்டப்பட்டு வருகிறது.
இதன் வழியாக ஒருவர் உள்ளே சென்று சிறுவனை சுரங்கம் வழியாக வெளியே எடுத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரவு பகலாக அங்கேயே நின்று நடவடிக்கைகளை எடுத்து வரும் போலீஸ், தீயணைப்புப் படையினரின் சேவையை மக்கள்பாராட்டி வருகின்றனர்.
அன்பழகன் பார்வை:
இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன் இன்று (சனிக்கிழமை) ஆடியபாதம்தெருவுக்குச் சென்று சிறுவனை மீட்கும் முயற்சிகளை பார்வையிட்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications