ரமேஷ் சாவில் உண்மையை சொல்லிவிடுங்கள்- திமுகவினருக்கு ஜெ. எச்சரிக்கை
சென்னை:
சென்னை மேயர் ஸ்டாலினின் நண்பர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில்திமுகவினர் தாங்களாகவே உண்மைகளை வெளியே சொல்லிவிடுவது தான் நல்லது. இல்லாவிட்டால் நானேஅதைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
ரமேஷ் சென்னை மேம்பால ஊழல் வழக்கில், மேயர் ஸ்டாலினுக்கு துணைபுரிந்தாக முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டவர்.
இறப்பதற்கு முன்பு ரமேஷ் எழுதியதாகக் கூறப்பட்ட 2 கடிதங்களை, ரமேசின் தம்பி ரமணன் வெளியிட்டார்.
அதில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகளுக்குப் பயந்துதான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகஎழுதப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ரமேசும், ரமணனும் சேர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் நிலத்தைத் தங்கள்பெயருக்கு மாற்றி எழுதி மோசடி செய்துள்ளதாகவும் ரமணன் மீது இப்போது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து ரமணனிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகிறது.
அப்போது திமுக உறுப்பினர் புகழேந்தி இடைமறித்து திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது, மற்றும்திமுக பேரணியில் நடந்த வன்முறை ஆகியவற்றைப் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன்மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
இதையடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,
ஒரு பிரச்சனை பற்றி விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் போது, அதைப் பற்றி பேசுவதுகுற்றமாகும்.
உறுப்பினர் புகழேந்தி இதுபோல சபைக்கு வெளியில் பேசினால், அவர் ஜெயில் தண்டணையை விரும்பிவரவேற்கிறார் என்று அர்த்தம்.
மேலும் குடும்பத்துடன் மரணமடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது போலீசார்விசாரணையில் தெரியவந்துள்ளது. அது தற்கொலை அல்ல. அந்த மர்ம மரணத்துக்கான காரணம் உங்களுக்கு(திமுகவினருக்கு) தெரியும்.
எனவே திமுகவினர் இந்த விவகாரத்தில் நடந்த உண்மையை அவர்களாக ஒத்துக் கொள்வது நல்லது.இல்லாவிட்டால் நானே அதைப்பற்றி சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் கடந்த ஆட்சியில் என் மீது போடப்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணையில் இருந்த போதே நான்ஜெயிலில் அடைக்ககப்படுவேன் என்று திமுகவினர் சட்டசபையில் கூறினார்கள்.
இதன் மூலம் அந்த வழக்கு பற்றி விசாரித்த நீதிபதிகளைத் திமுகவினர் தங்கள் கைக்குள் வைத்திருந்தனர் என்பதுதெளிவாகிறது என்றார் ஜெயலலிதா.
அப்போது குறுக்கிட்ட எதிகட்சித் தலைவர் அன்பழகன், நாங்கள் அப்படி சொன்னது பொதுக்கூட்ட மேடையில்தான். சட்ட சபையில் அல்ல என்றார்.
உடனே முதல்வர் எழுந்து, எதிர்கட்சித் தலைவர் இப்போது கூறுவதிலிருந்தே, திமுகவினர் "இரட்டை நாக்குப்"படைத்தவர்கள் என்பது நிருபணமாகிறது என்றார்.
(அதாவது சட்டசபைக்கு வெளியில் ஒன்றும், உள்ளே ஒன்றும் பேசுவதாக)
பிறகு சபாநாயகர் காளிமுத்து குறிக்கிட்டு, திமுக எம்.எல்.ஏக்கள் கடந்த ஆட்சியில் சட்டசபையில் அவ்வாறுபேசியது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications