சந்திரிகாவுக்கு சிங்கள கட்சி ஆதரவு... தப்பியது அரசு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி)கட்சியின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதால் அக் கட்சி சந்திரிகா அரசை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இதனால்சந்திரிகா அரசுக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கியுள்ளது.
இலங்கை அதிபருக்கும், ஜே.வி.பி. தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து அரசு அதிகாரிகள் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிபர் குமாரதுங்காவுக்கும், ஜே.வி.பி. தலைவர்களுக்கும் இடையே நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதுஜே.வி.பி. விடுத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள அதிபர் சம்மத்தித்தார்.
இதையடுத்து சந்திரிகா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என்று ஜே.வி.பி.தலைவர்கள் தெரிவித்தனர். இந்த ஆதரவு 1 வருட காலத்திற்கு நீடிக்கும் என்றும்தெரிவித்தனர்.
இது குறித்து அரசு எந்த விதமான அதிகார பூர்வமான அறிவிப்பையும்வெளியிடவில்லை. ஆனாலும்ஜே.வி.பியின் முக்கிய கோரிக்கைகளை மக்கள்கூட்டணி ஏற்றுக் கொள்கிறது என்ற கடிதத்தை பிரதமர் ரத்ன ஸ்ரீ விக்ரமநாயகேஜே.வி.பிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறினர்.
சந்திரிகா குறிப்பிட்டபடி வரும் 7ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும்,அடுத்த மாதம் 18ம் தேதி எடுப்பதாக இருந்த பொதுஜன வாக்கெடுப்பு முடிவையும்அதிபர் திரும்ப பெறுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள தீவிரவாத கட்சி தான் இந்த ஜே.வி.பி.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications