"நக்கீரன்" ஆசிரியருக்கு கொலை மிரட்டல்
சென்னை:
"நக்கீரன்" இதழ் ஆசிரியர் கோபாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
பலமுறை வீரப்பனை காட்டில் சந்தித்து பேட்டி எடுத்தவர். பலரை வீரப்பன் கடத்திச் சென்றபோதேல்லாம் அரசுத்தூதராகச் சென்று வீரப்பனிடம் பேசி பணயக் கைதிகளை மீட்டுள்ளார். சமீபத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரை,வீரப்பன் கடத்திச் சென்ற போது தமிழக அரசின் தூதுவராக காட்டுக்குள் சென்றவர்.
ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது இவரது அலுவலகம் தாக்கப்பட்டது. 2 ஊழியர்கள்கொல்லப்பட்டனர்.
இப்போது மீண்டும் தனது வீட்டிற்கு ஒரு கும்பல் வந்து கொலை மிரட்டல் விட்டுச் சென்றுள்ளதாக புகார்கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்த இதழின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் எங்கள் ஆசிரியர் கோபாலின் வீட்டிற்கு வந்துள்ளது.அவர்களில் சிலர் "யூனிபார்ம்" அணிந்து இருந்தார்கள்.
வீட்டிற்குள் திபுதிபுவென நுழைந்த அந்தக் கும்பல் கோபால் எங்கே என்று வீட்டில் உள்ளவர்களை மிரட்டிக்கேட்டுள்ளது.
மேலும் கோபால் எங்கெங்கு செல்வார் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கு வாசலில் காவலுக்கு இருந்த செக்யூரிடியிடம், கோபால் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிக்கூறுமாறு மிரட்டிக் கேட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து, எங்கள் ஆசிரியிர் இதுகுறித்துப் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் கடந்த சில வாரங்களாக தமிழக போலீசாரின் நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் எங்கள் இதழில்வெளியிட்டு வரும் தொடருக்கும், இந்த மிரட்டலுக்கும் சம்பந்தம் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
இது குறித்து பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இவ்வாறு காமராஜ்கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, காவல் துறைக்கும் இந்த மிரட்டலுக்கும் எந்தவித சம்பந்தமும்இல்லை. இருப்பினும் நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications