பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்தது
டெல்லி:
கடந்த 5 வார காலமாக நடைபெற்று வந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றோடு முடிவடைந்தது.இதையடுத்து 2 அவைகளும் மறு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் தொடரில் நாட்டை உலுக்கிய யூ.டி.ஐ. விவகாரம் மற்றும் தெகல்கா ஆயுத பேர விவகாரம் போன்ற முக்கியபிரச்சனைகள் குறித்து விவாதம் நடந்தது.
இந்தத் தொடரில் மொத்தம் 60 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் 38 மசோதாக்கள்இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.
நேற்று (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் பாலயோகி அறிவித்தார்.
முன்னதாக கூட்டத் தொடர் நிறைவு நாள் உரையில் பிரதமர் வாஜ்பாய் கூறியதாவது, ஜனநாயகத்தை நிலைநாட்டநல்லொழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். எதிர்கட்சியின் எந்தக் குற்றச் சாட்டுகளைக் கொண்டுவந்தாலும் அதைநாங்கள் முறியடிக்கத் தயாராக இருக்கிறோம்.
ஆனால் எதற்கும் ஒரு அளவுண்டு. கடந்த 2 கூட்டத் தொடர்கள் மனக்கசப்பில் முடிவடைந்தன, ஆனால் இந்தக்கூட்டத் தொடர் நட்புறவுடன் முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமைதி காக்க ஒத்துழைக்கவேண்டும்.
அனைவருக்கும் எனது ஓனம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவத்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது,
போதுமான நேரம் இல்லாததால் யூ.டி.ஐ. மற்றும் தெகல்கா விவகாரங்களைத் தவிர மற்ற பல முக்கியமானபிரச்சனைகளைப் பற்றிப் பேசமுடியவில்லை.
மேலும் இந்தக் கூட்டத் தொடரிலும் பா.ஜ.க. அரசு பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தைநிறைவேற்ற தவறிவிட்டது என்றார்.
ராஜ்யசபையும் ஒத்திவைப்பு
ராஜ்யசபையும் நேற்றோடு ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 நாட்கள் கூட்டம் நடைபெற்றது. 32 மசோதாக்கள்நிறைவேற்றப்பட்டன.
புதியதாக 8 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து விடை பெற்றுச் சென்றனர்.
புதியதாக 12 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications