தமாகாவைக் கைப்பற்ற சிதம்பரத்தின் "மெகா" திட்டம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்ற தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப. சிதம்பரம் மெகா சைஸில் திட்டமிட்டுவருகிறார்.
மூப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனிக் கட்சி கண்டாலும் கூட தமாகா மீதும், மூப்பனார் மீதும் தனி மரியாதை வைத்திருந்தவர் ப.சிதம்பரம்.தற்போது மூப்பனார் இல்லாத நிலை, சிதம்பரத்துக்கு பெருத்த மன வேதனையைத் தந்துள்ளது.
தற்போது தமாகா அழிந்து போய் விடாமல் பார்த்துக் கொள்ள அவர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கட்சியில் மூப்பனாரைத் தவிர வேறுதலைவர் இல்லை, கோவிந்தவாசன்தான் தலைவர் என்று கட்சியினர் முடிவெடுத்திருப்பதையும் அவர் விரும்பவில்லை.
மூப்பனாருடைய மகன் என்ற வகையில், கோவிந்தவாசன் மீது அவருக்கு தனி மரியாதை உண்டு. ஆனால் திடீரென கட்சியின் தலைவராக கோவிந்தவாசன்தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து அவர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
கோவிந்தவாசனால் கட்சியை நடத்த முடியாது என்று அவர் நினைக்கிறார். எனவே தமாகாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிதம்பரம்திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக தமாகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறும், தனது அடுத்த உத்தரவுக்கேற்ப நடந்து கொள்ளுமாறும்கேட்டுக் கொண்டுள்ளார்.
தமாகவிலிருந்து விரைவில் பல தலைவர்கள் வெளியேறலாம் என்று சிதம்பரம் நினைக்கிறார். "யாரெல்லாம் வெளியேறுகிறார்களோவெளியேறட்டும். நமது நேரம் வரும்போது, கட்சியை கைப்பற்றுவோம்" என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளாராம் சிதம்பரம்.
மூப்பனார் காட்டிய வழியில், ஊழலற்ற, நேர்மையான அரசியலை நடத்த சிதம்பரம் சூளுரைத்துள்ளாராம். மூப்பனார் கனவு கண்ட "காமராஜர் ஆட்சி"என்ற மிகப் பெரிய லட்சியத்தை கிட்டத்தட்ட காங்கிரஸாரும், தமாகவினரும் அடியோடு மறந்து விட்டதை நினைத்து அவர் வேதனைப்படுகிறாராம்.
எனவே இப்போதைக்கு சிதம்பரம் அமைதியாக இருப்பது, விரைவில் பாய்வதற்குத்தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications