அக்டோபர் 16, 18ல் உள்ளாட்சித் தேர்தல்
சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறஉள்ளன.
இவற்றின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இதையடுத்து, அந்தத் தேதிக்கு முன்னதாகவே உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி உறுப்பினர்களைத் தேர்வுசெய்துவிட வேண்டும் என்பதற்காக, தீவிரப் பணிகளில் தேர்தல் கமிஷன் இறங்கியது.
தற்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கல் துவக்க நாள் - செப்டம்பர் 20, 2001
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப்டம்பர் 27, 2001
மனுக்கள் பரிசீலனை - செப்டம்பர் 28, 2001
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - அக்டோபர் 01, 2001
முதல் கட்ட தேர்தல் - அக்டோபர் 16, 2001
2வது கட்ட தேர்தல் - அக்டோபர் 18, 2001
ஓட்டு எண்ணிக்கை துவக்க நாள் - அக்டோபர் 21, 2001
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் நாள் - அக்டோபர் 25, 2001
"பஞ்சாயத்து ராஜ்" சட்டப்படி கடந்த 1996ம் ஆண்டு முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன்பிறகு,தற்போது 2வது முறையாக இத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிகளும், 104நகராட்சிகளும், 635 பஞ்சாயத்து யூனியன்களும், 12,584 கிராமப் பஞ்சாயத்துக்களும் உள்ளன.
இவற்றில் 4 மாநகராட்சிகள் திமுக வசமும், 2 மாநகராட்சிகள் தமாகா வசமும் உள்ளன. நகராட்சி, பஞ்சாயத்துயூனியன் மற்றும் கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றில் பெரும்பாலானவற்றையும் இந்த 2 கட்சிளுமே வைத்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications