அறக்கட்டளை விவகாரம்: 2 வாரங்களில் ஜி.கே. வாசன் முடிவு
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திநியமித்துள்ளது குறித்து, மூப்பனாரின் 16-ம் நாள் காரியம் முடிந்த பிறகு, தமாகா புதிய தலைவர் கோவிந்தவாசன்தனது கருத்தை தெரிவிப்பார் எனத் தெரிகிறது.
முதலில் மூப்பனாரின் மகன் கோவிந்தவாசன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த நாளே, தமிழககாங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிதாக 5 அறங்காவலர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார்.
புதிதாக 5 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டது குறித்து தமாகா கட்சித் தலைவர்கள் பெரும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். காரணம், அவர்கள் வசம் இருக்கும், சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள சத்தியமூர்த்தி பவன்,காமராஜர் பவன், காமராஜர் அரங்கம், காங்கிரஸ் மைதானம் ஆகியவை பறிபோய் விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த நிலையை எதிர்கொள்வது குறித்து திங்கள்கிழமை கட்சியின் பல்வேறு மட்ட தலைவர்கள் கலந்துபேசினார்கள். அப்போது சட்டப்பூர்வமாக இதை அணுகுவது குறித்த வாய்ப்புகளையும் ஆராய்ந்தார்கள்.
காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கு தங்களைக் கட்டாயப் படுத்துவதற்காகவே சோனியா காந்தி இப்படிநடந்துள்ளார் என சில தலைவர்கள் கருத்து வெளியிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும் இப்படிச் செய்வதால்பணிந்து விடுவோம் என்று சோனியா நினைத்தால், அது பெரும் தவறு என்றும் சில தலைவர்கள் கருத்துத்தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்சித் தலைவர் கோவிந்தவாசன், தனது தந்தை மூப்பனாரின் இறுதிக் காரியங்களை கவனித்துக்கொண்டிருக்கிறார். 16ம் நாள் காரியம் முடிந்த பிறகுதான் அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியும்.
எனவே அதற்குப் பிறகுதான் அறங்காவலர் குழு குறித்த விவகாரத்தை அவர் பார்க்க முடியும். எனவேகோவிந்தவாசன் வரும் வரை தமாகாவினர் பொறுமை காக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதன் பிறகு கோவிந்தவாசன் எடுக்கும் முடிவுக்கேற்ப நடந்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
எப்படியிருப்பினும், சோனியா காந்தியின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்பதில் மட்டும் தமாகாவினர்உறுதியாக உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications