சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை நிகழ்ச்சிகளைப் படம் பிடிப்பதில் திரைப்படப் பிரிவு பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து, திமுகஎம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு, தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர்.

சட்டமன்ற நிகழ்ச்சிகளை படம்பிடிக்க தமிழ்நாடு அரசு திரைப்படப் பிரிவுக்கு மட்டும் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்ட அன்றும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்றும் மற்ற தனியார்டிவிக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சட்டசபைக் காட்சிகளை படம்பிடிக்கும் திரைப்படத்துறை, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளைசரியாகப் படம்பிடிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக திமுக உறுப்பினர்கள் குறை கூறினார்கள்.

இதுகுறித்து திமுக உறுப்பினர் துரைமுருகன் சபாநாயகர் காளிமுத்துவிடம் கூறியதாவது,

அதிமுக அரசு பதவியேற்றது முதல் "பிலிம்ஸ் டிவிசன்", சட்டசபைக் காட்சிகளை படம்பிடித்து வருகிறது. இதில்எங்களைப் போன்ற எதிர்க் கட்சிகளின் நடவடிக்கைகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

பிலிம்ஸ் டிவிசன் சட்டசபைக் காட்சிகளை பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது. எனவே அனைத்து தனியார்தொலைக்காட்சிகளுக்கும் சட்டசபைக் காட்சிகளை படம்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு சபாநாயகர் காளிமுத்து பதிலளித்துப் பேசுகையில் கூறியதாவது,

பிலிம்ஸ் டிவிசனின் காட்சிப் பதிவுகளில் பாரபட்சம் எதுவுமில்லை. சட்டமன்றக் காட்சிகளை காலையில் 30நிமிடங்களும், மாலையில் 20 நிமிடங்களும் தான் காண்பிக்க முடியும்.

இந்த அளவுக்குள் காட்சிகள் அடங்குமாறு, முக்கியமான காட்சிகள் மட்டும் தனிக்கை செய்யப்பட்டு, அவைதனியார் டிவிக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதில் எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன. இந்தக் குறுகிய கால அவகாசத்தில்சட்டசபையில் நடக்கும் அனைத்துக் காட்சிகளையும் காண்பித்துவிட முடியாது. இருப்பினும் முதல்வர் மற்றும்எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் முக்கியமான உரைகள் அதில் இடம்பெறுகின்றன.

மேலும், சட்டசபையில் அனைத்து தனியார் டிவிக்களையும் படம்பிடிக்க அனுமதித்தால் இடவசதி போதாது என்றுகூறினார்.

காளிமுத்துவின் பேச்சில் சமாதானமடையாத திமுக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களைஇருட்டடிப்பு செய்வதை எதிர்ப்பதாகக் கூறி, தங்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டி, தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் தம்பித்துரை எழுந்து, "சட்டசபையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில்எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொள்வதை அனுமதிக்கக் கூடாது" என்று சபாநாயகரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இதற்கு சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களிடம், "நீங்கள் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களாக இருக்கிறீர்கள்.சட்டமன்றத்திற்கு புதிதாக வந்துள்ள இளம் உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்" என்று கூறினார்.

அதற்கு துரைமுருகன், "எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்தோம். ஆனாலும்,சபாநாயகரின் வேண்டுகோளுக்குக் கட்டுப்படுகிறோம்" என்று கூறினார்.

பிறகு, அனைத்து திமுக எம்எல்ஏக்களும் தங்கள் வாயிலிருந்து கறுப்புத் துணியை கழற்றினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+