நஷ்டத்தில் இயங்கும் அரசு சிமெண்ட் நிறுவனங்கள்
சென்னை:
தமிழக அரசுக்குச் சொந்தமான சிமெண்ட் நிறுவனங்களில் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகசட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் சிமெண்ட் விலை வெகுவாகக் குறைந்தது. இருப்பினும் சிமென்ட் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகரித்துவருவதால், சிமெண்ட் தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுகிறது. அரசுக்குச் சொந்தமானபெரிய நிறுவனங்களின் நிலை குறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது கூறப்பட்டதாவது:
ஆலங்குலத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையில், 2000-01ம் நிதி ஆண்டில் ஆலையின் மொத்தப்பயன்பாடு 76 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் உற்பத்திக்கு ஆகும் செலவைக் குறைக்க முடியாதகாரணத்தால், ரூ.9.27 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கால் பகுதியில் சந்தை நிலவரம் மிக மோசமாக இருந்ததால் ஆலையின் மொத்தப் பயன்பாடு43 சதவீதத்திற்கும் தாண்டாமல் கட்டுப்படுத்தப்பட்டது. பிறகு அடுத்து வந்த 2, 3 மற்றும் 4-வது கால் பகுதிகளில்சந்தை நிலவரம் ஓரளவு சீரானதைத் தொடர்ந்து, ஆலையின் உற்பத்தி 86 சதவீதம் வரை வந்தது.
இருப்பினும் சிமெண்ட் விலை இறக்கத்தின் காரணமாகவும், உற்பத்திச் செலவினங்களின் காரணமாகவும் நஷ்டமேஏற்பட்டுள்ளது.
இதேபோல அரியலூர் சிமெண்ட் ஆலையிலும் ரூ.13.08 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆலையின்சராசரி உற்பத்தி 92 சதவீதமாக இருந்தது.
மேலும் ஆலங்குலத்தில் இயங்கும் கல்நார்த் தகடு ஆலையிலும் ரூ.30.64 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.வியாபாரத்தில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகவும், உற்பத்திச் செலவினங்களாலும் இந்த நஷ்டம்ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, மாயனூர் மற்றும் விருதாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள குழாய்கள் தயாரிக்கும் ஆலைகளும்,ஆர்டர்கள் இல்லாததால் செயல்படாமல் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.7 கோடிக்கு மேல் நஷ்டம்ஏற்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications