உள்ளாட்சித் தேர்தலில் "நோ" மின்னணு வாக்கு எந்திரம்
சென்னை:
வரும் உள்ளாட்சித் தேர்தலின்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படாது என்று தமிழகதேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இது மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. மக்கள் விரைந்து வாக்களிப்பதற்கு இந்த எந்திரங்கள் பெரிதும்உதவின என்று அனைத்துத் தரப்பிலும் இருந்து தேர்தல் கமிஷனுக்குப் பாராட்டுக்கள் குவியத் தொடங்கின.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையும் ஒரே நாளில்முடிவடைந்து விட்டது. காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து, மாலைக்குள்ளாகவே ஆட்சி அமைப்பது யார்என்று தெரியும் அளவுக்கு அவ்வளவு வேகமாக முடிவுகள் தெரிந்தன.
ஆனால், அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில், இந்தமின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று தமிழக தேர்தல் கமிஷனர் பி.எஸ்.பாண்டியன் கூறியுள்ளார்.
3 இடங்களில் தேர்தல் கிடையாது
ஏற்காடு ஊராட்சி, குத்தாலம் பேரூராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய 3 இடங்களிலும் உள்ளாட்சித்தேர்தல் நடக்காது என்றும் தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார்.
இந்த 3 இடங்களிலும் தேர்தல் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறாத காரணத்தால், இங்கு தற்போது தேர்தல்நடக்காது என்று அவர் விளக்கமளித்தார்.
தேர்தலைத் தள்ளிவைக்கும் எண்ணமில்லை - தம்பிதுரை
இந்நிலையில், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வரை, உள்ளாட்சித்தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற தமாகா எம்எல்ஏவின் வேண்டுகோளை தமிழக கல்வி அமைச்சர்தம்பிதுரை ஏற்க மறுத்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) சட்டசபையில் அவர் பேசுகையில், "வாக்காளர் பட்டியலை 2 அடுக்கு தேர்வு முறை மூலம்வடிவமைப்பது பற்றி தமாகா எம்எல்ஏ ஆலோசனை கூறினார். ஆனால் அதற்குச் சட்டத்தில் இடமில்லை.
மேலும், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி காரணமாக, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கும் எண்ணம்அரசிடம் இல்லை. திட்டமிட்ட தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications