முதல்வர் பதவியை ஜெ. ராஜினாமா செய்வதாக வதந்தி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அனுராதாதினகரன் அல்லது சரோஜாவை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதாக திடீர் வதந்தி பரவியது.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கக் காரணமாக இருந்த டான்சி வழக்குவிசாரணை இன்னும் முடியவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 13ம் தேதிக்குள் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக வேண்டும். ஆனால் இந்த வழக்கில் இழுபறி நீடித்துவருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்றும், அந்த இடத்தில் ஒருபெண்ணையே நியமிக்க விரும்புகிறார் என்றும் ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டது. இதற்காக சசிகலாவின் அக்காள்மகன் தினகரனின் மனைவி அனுராதா தினகரன் மற்றும் அமைச்சர் சரோஜா ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாகச்சொல்லப்பட்டது.
இந்த வதந்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை முழுவதும் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. நேற்று பிற்பகலில் கிளம்பிய இந்த வதந்தி திமுக வட்டாரத்திலும் பரபரப்பாகப்பேசிக்கொள்ளப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அளவில் கூட இதுபற்றி இரகசியமாகப் பேசிக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால், இதுகுறித்து அதிமுக தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லைஎன்பதால் இந்த வதந்தி நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.
இதைக் கிளப்பிவிட்டது திமுகவினர் என்று சிலரும், அதிமுகவினர்தான் என்று சிலரும் கூறினார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications