சென்னையில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள்சென்னையில் புதன்கிழமை ஊர்வலம் நடத்தினர்.
தங்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் கோஷமிட்டனர்.
அரசு விருந்தினர் மாளிகை வரை ஊர்வலத்தினர் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊர்வலப் பிரதிநிதிகள் சிலர்தலைமைச் செயலகம் சென்று அங்கு மனு கொடுத்தனர்.
"சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அது பற்றி விரைவில்முடிவெடுக்கப்படும்" என்று நேற்று முன் தினம் (திங்கள்கிழமை)தான் சட்டசபையில் விவாதம் நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications