காளிமுத்து முதல்வர் ஆவாரா?
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இருப்பினும் அவருக்கு அடுத்து யார் முதல்வர் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டான்சி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். ஆனால் அப்பீல்மனுவை விசாரிப்பதிலும் அரசு வக்கீல் வெங்கடபதி உருவத்தில் தடங்கல் ஏற்பட்டது.
தனக்கு போதுமான கால அவகாசம் தரவில்லை என்றும் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்க அனுமதிதரவில்லை என்றும் கூறி விசாரணையைத் தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டார்வெங்கடபதி. இந்நிலையில், டான்சி வழக்கின் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இப்போதைய சட்ட சிக்கல்கள் பெரிதாகும் முன் பதவி விலகுவதே நல்லது என்று அவருக்கு சில முக்கிய புள்ளிகள்ஆலோசனை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களது ஆலோசனையை ஏற்று தனது பதவியை ராஜினாமாசெய்ய ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஜெயலலிதா ராஜினாமா செய்தால், முதல்வர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் குழப்பம்நிலவுகிறது. இப்போதைய அமைச்சர்களில் யாருக்கும் முதல்வர் பதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது.
பொன்னையன் மட்டுமே இப்போதைய அமைச்சர்களில் சீனியர், அனுபவம் வாய்ந்தவர். இருப்பினும் முதல்வர்பதவி என்பது கொஞ்சம் சூடான பதவி என்பதால் அதை சமாளிக்கும் திறன் அவருக்கு இருக்கிறதா என்பதுசந்தேகமே.
பெரும்பாலும் சபாநாயகர் காளிமுத்துவுக்கு முதல்வர் பதவி கிடைக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அவரைமுதல்வராக்கி விட்டு சபாநாயகர் பொறுப்பை அமைச்சர் பொன்னையன் அல்லது ஜெயக்குமாரிடம் கொடுக்கஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் எது முதலில் நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications