விபத்திலிருந்து தப்பியது மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பிச் சென்ற மலைக்கோட்டை ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
மதுராந்தகம் அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை இந்த ரயில் நெருங்கியபோது, ரயில் வருவதை அறியாத ஒருலாரி வேகமாக தண்டவாளத்தை கிராஸ் செய்ய முயன்றது.
ஆனால் தண்டவாளத்தின் நடுவில் திடீரென சிக்கி நின்று விட்டது. ரயில் பக்கத்தில் வருவதை அறிந்ததும்உடனடியாக லாரியை அகற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து தண்டவாளத்தில் நின்று துணிகளை ஆட்டியும், கைகளை ஆட்டியும் ரயிலை நிறுத்த முயன்றனர்.
தண்டவாளத்தில் நின்ற லாரியைப் பார்த்த ரயில் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டார். லாரியின்பக்கத்தில் வந்து ரயில் நின்றது. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications