பஸ்சில் பயணம் செய்த இளைஞர் லாரி உரசி சாவு
கீழவேளூர்:
வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக சென்று பிரார்தனையை செலுத்தி விட்டு பஸ்சில் வீடு திரும்பிய வாலிபர்தலை மீது லாரி உரசியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ளது மாணிக்கபுரம் கிராமம். அங்கு வசித்து வரும் அந்தோணிசாமிஎன்பவரின் மகன் செல்லதுரை (வயது 30). இவர் தனது ஊரைச் சேர்ந்த 30 பேருடன் வேளாங்கண்ணிக்கு நடந்துசென்று அன்னை மேரியை தரிசித்துவிட்டு, ஒரு அரசு பஸ் மூலம் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கீழவேளூர் அருகேயுள்ள கடம்பனூர் சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது திருவாரூரிலிருந்துநாகப்பட்டினம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று பஸ் மீது உரசியது.
பஸ்சின் ஜன்னல் அருகே அமர்ந்து தலையை வெளியே நீட்டியபடி பயணம் செய்து கொண்டிருந்த செல்லதுரையின்தலையை வேகமாக வந்த லாரி உரசியது. லாரி வேகமாக உரசியதால் செல்லதுரை தலை நசுங்கி மூளை சிதறிபஸ்சிலேயே இறந்து போனார்.
பஸ்சை உரசிய மினி லாரி நிற்காமல் விரைந்து சென்றுவிட்டது. இது குறித்து கீழ வேளூர் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மினி லாரியை தேடி வருகிறார்கள்.
செல்லதுரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications