காவிரி பிரச்சனை: டெல்லியில் இன்று கண்காணிப்புக் குழு கூட்டம்
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
காவிரி நதிநீர் ஆணையத்தின் நடுவர் குழு பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி கர்நாடகமும் நீர்திறந்துவிடவில்லை. இதனால் சிக்கல் மேலும் அதிகமானது.
மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருந்தாலும் பயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மேட்டூர்அணையிலிருந்து கடந்த 2 மாத காலமாக பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவிரி நதிநீர் ஆணையத்தின கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் பிரதமர் வாஜ்பாய்க்குகடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
காவிரி விஷயத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இந்நிலையில்செப்படம்பர் 6ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் கூட்டப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கூறியிருந்தார்.
இதற்கிடையே காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் கடிதம்எழுதினார் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக-கர்நாடக அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டும் ஜெயலலிதாகடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. பேச்சுவார்த்தைக்கானதேதியை விரைவில் அறிவிப்பதாக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா.
இந் நிலையில் மத்திய நீர் வள அமைச்சர் கூறியபடி இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 4மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகத்தின் சார்பில், தமிழக தலைமைச் செயாலாளர் சங்கர், பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம்,தலைமை பொறியாளர் சிவராமன், காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி வாடுவதால்,காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வற்புறுத்துவார்கள்.
கர்நாடகாவிலும் வறட்சி நிலவி வருவதாக, அம்மாநிலம் கூறி வருவதால், அவர்களும் தங்கள் நிலை குறித்துஎடுத்துக் கூறுவார்கள்.
இந்தக்கூட்டத்திற்கு பின்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுமா என்பது குறித்து தெரியவரும்.
மேட்டூர் அணையில் உள்ள நீரின் அளவு இன்னும் 2 வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications