கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க டூருக்கும் கங்குலி கேப்டன்
மும்பை:
அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகசவுரவ் கங்குலியே தொடர்வார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
கங்குலியும் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு சிறப்பாக விளையாடவில்லை. "சிங்கிள் டிஜிட்"டுகளாக அவர்"குவித்த" (?) ரன்கள் பற்றி அனைவருக்கும் தெரியுமே. அவ்வப்போது, நடுவர்களை முறைத்துக் கொண்டு,ஆட்டத்திலிருந்து சஸ்பெண்டு ஆவதும், கங்குலிக்குக் கைவந்த கலையாகிவிட்டது.
நடிகை நக்மாவுடன் அவருக்கிருந்த தொடர்புதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் கிரிக்கெட் வட்டாரத்தில்பேசப்பட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் இந்திய அணிக்குகேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. இலங்கைடூருடன் கங்குலியின் கேப்டன் பதவிக்கு, கிரிக்கெட் போர்டு மங்களம் பாடிவிடும் என்று அனைவரும்எதிர்பார்த்தனர்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மீண்டும் கேப்டன் பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் கங்குலி. இன்று (வியாழக்கிழமை) கூடிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில்,தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக கங்குலியே நீடிப்பார் என்று முடிவுசெய்யப்பட்டது.
இது குறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை தேர்வாளர் சந்து போர்டே கூறுகையில்,"தென்ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு சவுரவ் கங்குலியையே கேப்டனாக நியமிப்பது என்று ஒருமனதாகமுடிவெடுக்கப்பட்டது" என்றார்.
நாளை (வெள்ளிக்கிழமை) தென்ஆப்பிரிக்காவில் செல்லவிருக்கும் மற்ற வீர்ரகளின் பெயர்கள்அறிவிக்கப்படவுள்ளது.
வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவு காரணமாக, நடந்து முடிந்த இலங்கை தொடரில் விளையாடாதடெண்டுல்கர், சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து விட்டார். இதனால் அவர் மீண்டும் அணியில் இடம் பெறுவார்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு விளையாடாமல் இருந்தசுழல் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயும் பூரண குணமடைந்து விட்டார். அவரும் தென்ஆப்பிரிக்கா செல்லும்அணியில் இடம் பெறலாம்.
நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்த ஜவஹல் ஸ்ரீநாத்துக்கும் அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என்றுநம்பப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் போட்டிகளிலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவிளையாடுகிறது. முத்தரப்பு போட்டியில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா தவிர கென்யாவும் பங்கேற்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications