இலங்கை: 20 பேர் அமைச்சரவை இன்று பதவியேற்பு?
கொழும்பு:
இரண்டு மாத கால இடைவெளிக்குப்பின் இலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. 40 பேர்கொண்ட அமைச்சரவை கலைக்கப்பட்டு, புதிதாக 20 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முஸ்விம் காங்கிரஸ் சந்திரிகா அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் சந்திரிகா அரசுபெரும்பான்மையை இழந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சந்திரிகா அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவந்தது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை 2 மாத காலத்திற்கு ஒத்தி வைத்தார்சந்திரிகா.
இந்நிலையில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவை (ஜே.வி.பி) சந்திரிகாகேட்டுக் கொண்டார். அதற்கு ஜே.வி.பி. சில நிபந்தனைகளை விதித்தது.
"தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் தரக்கூடாது. புதிய அரசியல் சட்டம் தொர்பானபொது வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும். சந்திரிாகஅரசின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும்"ஆகியவைதான் ஜே.வி.பி. விதித்த நிபந்தனைகள்.
இவை தவிர ஜே.வி.பியின் வேறு சில நிபந்தனைகளையும் சந்திரிகா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர்கள்சந்திரிகா அரசுக்கு 1 வருட காலம் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க ஒப்புக் கொண்டனர். ஜே.வி.பிக்கு 10எம்.பிக்கள் உள்ளனர்.அவர்கள் ஆதரவால் சந்திரிகா அரசுக்கு இருந்துவந்த ஆபத்து நீங்கி விட்டது.
ஜே.வி.பியின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சந்திக்கத்தயார் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
சந்திரிகா முன்பு அறிவித்த படி நாடாளுமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) கூடுவதாக இருந்தது. தற்போது ஒருநாள் முன்னதாக வியாழக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளார்.
இன்றைய கூட்டத்தின்போது, ஏற்கனவே உள்ள அமைச்சரவை கலைக்கப்பட்டு, புதிதாக 20 அமைச்சர்கள்பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய அமைச்சரவையில் ஜே.வி.பியும் பங்கேற்கும்என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுஐக்கிய தேசிய கட்சி வற்புறுத்தியுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் அனுரா பண்டாரநாயகாவிடம் புதிதாகநம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய ஐக்கிய தேசிய கட்சி முடிவெடுத்துள்ளது.
சந்திரிகா மேல் அதிருப்தி கொண்டுள்ள 3 மந்திரிகள், 11 எம்.பிக்களுடன் சந்திரிகா கட்சியிலிருந்து விலகுவார்கள்.அவர்கள் ஆதரவுடன் சந்திரிகா அரசை தோற்க செய்யலாம் என்று ஐக்கிய தேசிய கட்சி கருதுகிறது. இது குறித்துஐக்கிய தேசிய கட்சியினர், அந்த அதிருப்தி எம்.பிக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தனிநாடு கோரிக்கையை கைவிடும் வரை விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று தாங்கள்விதித்த நிபந்தனையை சந்திரிகா ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர்களில் ஒருவரான சோமவனசாஅமர சிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து தமிழக தலைவர்கள் கவலைதெரிவித்ததுள்ளனர்,
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடவிருக்கும் இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தை மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications