காவிரி: அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
சென்னை:
காவிரி நீர் பிரச்சனை பற்றி விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில்,சென்னையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்குத் தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் சனிக்கிழமைமாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது.
திமுக சார்பில் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களும், தமாகா சார்பில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் பல கட்சித் தலைவர்களும் இக்கூட்டத்தில கலந்து கொண்டுள்ளனர்.
காவிரியில் நீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடகத்தை எந்த வகையில் அணுகுவது என்பது குறித்து,இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்களின் - குறிப்பாக விவசாயிகளின் - முக்கியப் பிரச்சனையாக காவிரி நீர் பிரச்சனை இருப்பதால்,அரசியல் கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் மறந்துவிட்டு, சுமூகமான ஒரு முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்படும்என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிக்கலான அரசியல் சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள ஜெயலலிதாவும், இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகளின்நலனுக்கான ஒரு தெளிவான முடிவை எடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. அவரும் எதிர்க்கட்சிகளின் சிறந்தஆலோசனைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தமழகம் எப்போதுமே தண்ணீர் பிரச்சனையால் அல்லாடிக் கொண்டிருப்பதால், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து,இக்கூட்டத்தின் மூலம் ஒரு நல்ல முடிவை - அதிலும் நிரந்தர முடிவை - எடுப்பார்கள் என்று அனைவரும்எதிர்பார்க்கின்றனர்.
"இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை திமுக ஆதரிக்கும்" என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள்முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications