காஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கி 6 ராணுவத்தினர் பலி
உதாம்பூர்:
காஷ்மீர்-உதாம்பூர் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி ஒரு ராணுவ கமாண்டர் உள்பட 6 எல்லைப் பாதுகாப்புப்படை (பி.எஸ்.எப்) வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.
கமாண்டரின் ஜீப் தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணி வெடியை தாண்டும் போது, சற்றுத் தொலைவில்பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்ணி வெடியை வெடிக்கச் செய்தனர்.
இதையடுத்து, கண்ணி வெடி பெரும் சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தஅனைவரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குள்ளான ஜீப் சுக்குநூறாக சிதறியது. இறந்தவர்களின் உடல்கள் சுமார் 30 மீட்டர் தூரம் வரை தூக்கிஎறியப்பட்டது.
போலீசார் வெடிவிபத்து நடந்த இடத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். வெடிவிபத்துக்கு காரணமான தீவிரவாதிகளைதேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஜ்புல் முஜாஹுதின் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்சின் மீது தீவிரவாதிகள் கண்ணி வெடியை ரிமோட்கண்ட்ரோல்மூலம் வெடிக்க வைத்ததில் பஸ்சில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications