விஷச்சாராய சாவு 13 ஆக உயர்வு
சென்னை:
சென்னை அம்பத்தூர் அருகே விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் சட்டசபையில் சனிக்கிழமை எதிரொலித்தது. இதுகுறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குமாநில வருவாய்த்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்கும்போது கூறியதாவது:
பெண் வீட்டைச் சேர்ந்த சிலர் ஆந்திராவிலிருந்து எரிசாராயத்தை வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். வரவேற்புநிகழ்ச்சிக்குப் பின் நள்ளிரவில் அவர்கள் அதை அருந்தியுள்ளனர்.
மொத்தம் 20 பேர் வரை இதை அருந்தியுள்ளனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களில், மாசிலாமணி மற்றும் டில்லி ஆகிய 2 பேரும் கள்ளச் சாராய வியாபாரிகள். அவர்களும் அதேஎரிசாராயத்தையே குடித்து உயிரிழந்தனர். ஆந்திராவிலிருந்து எப்படி எரிசாராயம் கடத்தி வரப்பட்டது என்பதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே, தங்களுக்கும், எரிசாராயக் கடத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திருமண வீட்டைச்சேர்ந்த பெண் வீட்டார் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,
இப்பகுதியில் நீண்டகாலமாகவே எரிசாராய விற்பனை உள்ளது. பல கள்ளச்சாராய வியாபாரிகள் இதில்ஈடுபட்டுள்ளனர். போலீஸாருக்கும் அவர்களுக்கும் நல்ல தொடர்பு உள்ளது.
இந்நிலையில் எரிசாராய விற்பனை குறித்து வெளியே தெரிந்து விட்டால், தங்களுக்குப் பிரச்சனை ஏற்படும்என்பதால் எங்கள் மீது போலீஸார் குற்றம் சுமத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சாராயம் குடித்து இறந்தவர்களின் உறவினர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்குவிந்துள்ளனர். சாராயத்தால் இறந்த தங்களது உறவினர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ளும் போது அவர்கள்கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications