காவிரி பிரச்சனை: டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு
சென்னை:
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடக் கோரி கர்நாடகத்தை வற்புறுத்துமாறு பிரதமரிடம்வலியுறுத்துவதற்காக, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சித்தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றுள்ளது.
இதையடுத்து அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையிலான முதல் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றது.
கல்வி அமைச்சர் தம்பிதுரை தலைமையிலான மற்றொரு குழுவினர் திங்கள்கிழமை காலை டெல்லி புறப்பட்டுச்சென்றனர்.
இவர்கள் அனைவரும், திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கின்றனர். கர்நாடகத்தை தண்ணீர்திறந்து விடுமாறு வலியுறுத்துமாறு பிரதமரிடம் அப்போது அவர்கள் கேட்டுக் கொள்வர்.
தமிழக குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
அதிமுக: தளவாய் சுந்தரம், தம்பித்துரை, பி.எச்.பாண்டியன், மலைச்சாமி, தினகரன், செளந்தரராஜன், முருகேசன்,நிறைகுளத்தான், டாக்டர் சரோஜா, எஸ்.எஸ்.சந்திரன், காளியப்பன், கோகுல இந்திரா, குமாரசாமி, காமராஜ்.
திமுக: அசோகன்.
காங்கிரஸ்: சுதர்சன நாச்சியப்பன், மணி சங்கர் அய்யர்.
தமிழ் மாநில காங்கிரஸ்: எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ஞானதேசிகன்.
பாரதீய ஜனதாக் கட்சி: கிருபாநதி, சி.பி.ராதாகிருஷ்ணன், டாக்டர் மாதன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மோகன், வரதராஜன்.
இந்திய கம்யூனிஸ்ட்: ஆர். நல்லக்கண்ணு.
அரசியல் கட்சிகள் தவிர காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications