கடலூரில் தொடரும் தீ - 4 பேர் பிடிபட்டனர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் பகுதிகளில் திடீர் தீ வைப்பு சம்பவங்களுக்கு காரணமான4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மனுக்குச் செய்த நேர்த்திக் கடன் குறைவாகத்தான், இந்தத் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று மக்கள்ஆரம்பத்தில் கருதி வந்தனர்.
ஆனால், தொடர்ந்து வந்த சில டெலிபோன் தகவல்கள் பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கின.டெலிபோனில் பேசும் மர்ம ஆசாமி, திடீரென குரலை மாற்றி, "இன்னும் சற்று நேரத்தில் உங்கள் பகுதியில் வீடுஎரியப் போகிறது" என கூறிவிட்டு வைத்து விடுவாராம்.
இதையடுத்து, மக்களின் மூட நம்பிக்கைகள் மறைந்து, டெலிபோன் போடுவர் யார் என்று தேடும் முயற்சியில்அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து பீதி காரணமாக ஏராளமானோர் வீடுகளை மற்றும் பொருட்களை இழந்து தவித்து வந்தனர்.மேலும், இரவு நேரங்களில் வீட்டுக்குள் படுத்து உறங்காமல், வீட்டை விட்டு வெளியே படுத்து உறங்கும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அந்தந்த கிராமத்தில் உள்ள வாலிபர்கள் ஒருங்கிணைந்து தடி, வீச்சரிவாள் போன்ற பயங்கரஆயுதங்களுடன் இரவு நேரங்களில் ரோந்து வந்தனர். பதட்டமான பகுதிகளில் ஏராளமான போலீசார்குவிக்கப்பட்டனர்.
ஆனால் மர்ம தீ விபத்து தொடர்கதையாகி வந்தது. இதையடுத்து, "கிராமத்தில் உள்ள வாலிபர்கள் உருட்டுகட்டைகளுடன் யாரும் சுற்றி வரவேண்டாம்" என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து,இந்த மர்மத் தீ விபத்து எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து போலீசார் ரகசியமாகவும் தீவிரமாகவும் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், தெற்கு கொளக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையும், அங்சாபுலி என்பவரையும்போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இந்த 2 பேரும் அதே ஊரை சேர்ந்த ராஜவேலு என்பவரது வீட்டிற்குதீ வைக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
ஆனால், போலீஸ் விசாரணையின்போது, "கிராமத்தில் ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காகத்தான் வீடுகளுக்கு தீவைத்தோம்" என்று அந்த 2 பேரும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, புத்தூர் அருகே உள்ள தெற்கு விருத்தாங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த பஞ்சாச்சரமும் அவரதுமனைவியும், தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களே தங்கள் வீட்டுக்குத் தீவைக்கும்போது பிடிபட்டனர். "அரசு உதவி பெறுவதற்காகத்தான் எங்கள் வீட்டுக்கு நாங்களே தீ வைத்தோம்" என்றுகூறியுள்ளனர்.
இதையடுத்து இன்னும் ஒரிஜினல் குற்றவாளிகள் பிடிபடவில்லை. போலீசார் தொடர்ந்து வலை வீசி அவர்களைத்தேடி வருகிறார்கள். பொதுமக்களும் இன்னும் சரியாக உறங்காமல், இரவெல்லாம் "கொட்டக் கொட்ட" முழித்துக்கொண்டிருக்கின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications