ரூ.10,000 கட்டினால் அதிமுக மேயர் வேட்பாளர்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், ரூ.10,000 கட்டிவிண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில், வேட்பாளர்களாகப்போட்டியிட விரும்பும் அதிமுகவினர் எவ்வளவு பணம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, மேயர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000 கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.மாநகராட்சிக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.5,000 பணமும், நகராட்சித் தலைவர்பதவிக்கு ரூ.5,000, நகராட்சிக் கவுன்சிலர் பதவிக்கு ரூ.1,500 கட்டி விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500,பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.1,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.500 கட்டிவிண்ணப்பிக்கலாம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
விண்ணப்பங்களை யாரிடம் பெறலாம் என்ற பட்டியலையும் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications