சென்னையில் விமானப்படை, பாராசூட் வீரர்கள் சாகசம்
சென்னை:
தாம்பரம் விமானப் படை தளத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிநடைபெற்றது. மயிர்க்கூச்செரிய வைக்கும் பல சாகசங்களை விமானப்படை வீரர்கள் செய்து காட்டி, மக்களைபிரமிப்பில் ஆழ்த்தின.
இந்த நிகழ்ச்சியைக் காண முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விமானப்படைஅதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், பல பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பல சங்கங்களைச்சேர்ந்தவர்கள் விமானப்படை மைதானத்தில் குழுமியிருந்தனர்.
காலை 10.15 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் 8 குட்டி விமானங்களும் 1 பெரிய விமானமும் கலந்துகொண்டன.
முதலில் ஒரு பெரிய விமானம் மேலே சென்றது. அதைத் தொடர்து குட்டி விமானங்கள் இரண்டு இரண்டாகஜோடியாக மேலே பறந்து சென்று, விண்ணில் ஆல்ஃபா வடிவில் பறந்து சென்று, பார்வையாளர்களைப் பிரமிக்கச்செய்தன.
பின்னர், இவை ஆங்கில எழுத்து "டி" வடிவத்தை விண்ணில் அமைத்துக் காட்டி, பார்வையாளர்ளை மகிழ்ச்சியில்ஆழ்த்தின. இதன் பின், டைமன்ட் வடிவத்தில் பறந்து சென்றபோது, பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம்செய்தனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை "செட்டக்"ஹெலிகாப்டர் வீரர்கள் செய்து காட்டினர். வங்கதேசப் போரில் பயன்படுத்தபட்ட விமானத்தின் மூலம், கயிறுகளில்இறங்கி போரிட்ட காட்சியை செய்து காட்டினர்.
இதையடுத்து உச்ச கட்டமாக 6,000 அடி உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து மயிர்க்கூச்செரிய வைத்தனர்.பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து, 12 வீரர்கள் பாராசூட் மூலம் குதித்தனர். பாரசூட் குடை விரித்து அழகாகதரையிறங்கியது.
தேசிய கொடியின் மூன்று நிறங்களிலும் வடிவமைக்கப்பட்ட பாராசூட்டுகள் தரையிறங்கின. 4 பேர் ஜோடிஜோடியாக தரையிறங்கினர். ஒருவர் மட்டும் தனியாக தரையிறங்கினார்
இந்த நிகழ்ச்சி நண்பகல் 12 மணிக்கு முடிவடைந்தது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications