என்ன செய்யப் போகிறது புதிய நீதிக் கட்சி?
சென்னை:
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பிறந்த ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில்தனித்துப் போட்டியிடும் அல்லது அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும் என்று தெரிகிறது.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது, எத்தனை இடங்களில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்புஎப்படி இருக்கிறது, எத்தனை இடங்கள் தேறும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. அக்கூட்டத்திற்குப் பின் கூட்டணி அமைத்துப்போட்டியா அல்லது தனித்துப் போட்டியா என்பதுகுறித்து தெரிய வரும்.
ஜெயலலிதாவின் டான்சி அப்பீல் வழக்கில் அரசுத்தரப்பு வக்கீலாக ஆஜராகியிருக்கும் வெங்கடபதி திமுகவைச்சேர்ந்தவர். திமுக ஆட்சிக்காலத்தில் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். திமுக உறுப்பினரும் கூட.
எனவே, இந்த வழக்கில் யார் பின்னணியில் உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் ஜெயலலிதாஇந்தவழக்கில் வெற்றி பெற்று வெளியே வருவார் என்றார் சண்முகம்.
சண்முகத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி முயற்சிப்பதாக தெரிகிறது.ஆனால் அவர்களை சேர்க்கும் மன நிலையில் அதிமுக இல்லை என்றும் கூறப்படுகிறது.
தெளிவான கொள்கை, நிலையான வாக்கு வங்கி எதுவும் இல்லாத புதிய நீதிக் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதால்கூட்டணிக்குத்தான் கெடுதல் என்று அதிமுக வட்டாரத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதச்சார்பற்றகூட்டணியாக உள்ள அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி கால் வைத்தால், அது கூட்டணித்தத்துவத்தையேகுலைத்து விடும் என்றும் யோசிக்கப்படுகிறது.
எனவே அதிமுக கூட்டணிக்கு கனவு கண்டிருக்கும் ஏ.சி. சண்முகத்தின் திட்டம் பலிக்காது என்றே கூறப்படுகிறது.இதனால் தனித்துப் போட்டியிடுவது குறித்து புதிய நீதிக் கட்சித் தலைவர்கள் யோசித்துக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications