பென்சில்வேனியாவில் 4-வது விமானம் மோதல்
கடத்தப்பட்ட 4வது விமானம் பிட்ஸ்பர்க்கில் இருந்து 80 மைல் தொலைவில் பென்சில்வேனியாவில் மோதிநொறுங்கி விழுந்தது.
கடத்தப்பட்ட 4 விமானங்களில் 2 விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்கின.மற்றொன்று வாஷிங்டன் அருகே உள்ள பென்டகன் என்ற அந்நாட்டுப் பாதுகாப்புத் தலைமையகத்தின் மீதுதாக்கியது.
கடத்தல்கார்ரகளால் கடத்தப்பட்ட இந்த 4வது விமானமும் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனை நோக்கிச் சென்றது.இதையடுத்து வாஷிங்டனில் பெரும் அச்சம் பரவியது. இந்த விமானத்தை விரட்டிக் கொண்டு அமெரிக்க போர்விமானங்கள் விரைந்தன.
அடுக்கு மாடிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த விமானம் எங்கு வந்துமோதுமோ எனத் தெரியாமல் அனைவரும் வானை நோக்கியபடி இருந்தனர்.
வாஷிங்டனில் தான் அந்நாட்டின் அதிபர் மாளிகையான உலகப் புகழ் பெற்ற வெள்ளை மாளிகை இருக்கிறது.அந்த கட்டிடத்தில் அதிபர் மாளிகை தவிர துணை அதிபரின் மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும்பாதுகாப்புப் படைகளின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
அவற்றை தாக்கும் நோக்கத்தில் தான் 4வது விமானம் சென்று கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரும்வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்நகரின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களும் காலி செய்யப்பட்டன.
ஆனால், இந்த 4வது விமானம் பென்சில்வேனியாவில் மோதி வெடித்துச் சிதறியது. தானாக மோதியதா அல்லதுஅமெரிக்க விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications