கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
டெல்லி:
காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளில் 97 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத்தேவைப்படுவதோ 50 டி.எம்.சி. மட்டுமே.
எனவே மீதமுள்ள தண்ணீரில், தினமும் ஒரு டி.எம்.சி. வீதம் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிடவேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசுவதாகப் பிரதமர் அவர்களிடம் வாக்குறுதிஅளித்துள்ளார்.
இந்நிலையில், காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கர்நாடகமுதல்வர் கூட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்குமா, இல்லையா என்பது, இக்கூட்டத்தின் முடிவில்தெரிந்துவிடும்.
சோனியா வாக்குறுதி
இந்நிலையில், காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வரிடம் வற்புறுத்தப்போவதாக தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமைகாலை வாக்குறுதி அளித்துள்ளார்.
ஜனாதிபதியிடமும் முறையிட அனைத்துக் கட்சி முடிவு
காவிரிப் பிரச்சனை தொடர்பாக, ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடமும் முறையிடப் போவதாக தமிழகஅனைத்துக் கட்சிக் குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து, இதுகுறித்துப் பேசவுள்ளனர் என்று தமிழககல்வி அமைச்சர் தம்பிதுரை கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications