சென்னையில் பெண், துபாயில் மாப்பிள்ளை... டெலிபோனில் திருமணம்
சென்னை:
காதல் கோட்டை படம் நிஜமாகிவிட்டது. அதில், பார்க்காமலேயே டெலிபோன் மூலம் காதல் தான் செய்தார்கள்அஜித்தும் தேவயானியும். அதையும் தாண்டி திருமணமே செய்து கொண்டுள்ளார்கள் ஒரு தம்பதி.
இந்த சுவராஸ்யமான நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு,
துபாயில் எலெக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருபவர் முகமது முஸ்தகீம். இவரும் சென்னையில் வசிக்கும் அமீனாஎன்ற பெண்ணும் உறவுக்காரர்கள்.
அமீனாவுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன.ஆனால் திருமணத்தன்று அந்த வாலிபர் திடீரென தலைமறைவாகி விட்டார். தந்தையை இழந்தவரான அமீனாஇதனால் மிகுந்த மன வேதனை அடைந்தார்.
அவரது உறவினர்கள் அவரை ஆறுதல் கூறித் தேற்றினார்கள். பிறகு அமீனாவின் உறவினர்களில் ஒருவரானமுஸ்தகீமின் தந்தை அமீனாவிடம் சென்று, "துபாயில் வேலை செய்யும் என் மகனைத் திருமணம் செய்துகொள்ளசம்மதமா?" என்று கேட்டார்.
அதற்கு அமீனா சம்மதம் தெரிவித்தார். துபாயில் உள்ள முஸ்தகீமும் இதற்கு "ஓ.கே." சொல்லிவிட்டார். முஸ்தகீம்துபாயில் இருப்பதால் அங்கிருந்துகொண்டே டெலி போன் மூலம் திருமண உறுதிமொழியை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் உள்ள பெண் வீட்டில், இமாம் தலைமையில் திருமணம்நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருமண விழாவில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
அதைநேரத்தில் துபாயிலும் மணமகன் முஸ்தகீம் கோட், சூட்டுடன் மணக்கோலம் பூண்டிருந்தார். அவருடன்அங்குள்ள அவரது உறவினர்கள் பலர் இருந்தனர்.
பின்னர் மணமகளும், மணமகனும் டெலிபோன் மூலம் உறுதி மொழியைப் பறிமாறிக் கொண்டனர். வழக்கமாகமுஸ்லீம்களின் திருமணத்தின் போது மணமகளும், மணமகனும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியம்இல்லை.
இந்தத் திருமணம் குறித்து துபாயில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த முஸ்தகீம் கூறியதாவது:
அமீனா எனது உறவுக்காரப் பெண்தான். ஏற்கனவே எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அடுத்தமாதம் இந்தியா வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருந்தேன்.
இந்நிலையில் அமீனாவின் நிலைகுறித்தும், அவளை மணமுடித்துக் கொள்ளுமாறும் என் தந்தை என்னிடம்கூறியவுடன், நான் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். அமீனாவிற்கும் இந்தத் திருமணத்தில் பூரண சம்மதம்என்பதை அவளிடம் டெலிபோனில் பேசித் தெரிந்துகொண்டேன் என்றார் முஸ்தகீம்.












Click it and Unblock the Notifications