மனித உரிமைக் கமிஷன் நீதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
மனித உரிமைக் கமிஷன் நீதிபதியாக இருப்பவரும், முன்னாள் தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமானசம்பந்தத்திற்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இவர் முதலில் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் உறுப்பினராகப் பணியாற்றி வந்தார். பிறகு வருமானத்திற்குஅதிகமாக சொத்துச் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீதானவழக்கை விசாரித்து வந்த தனி நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 7ம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அதன் பிறகு கடந்த மார்ச்மாதம் முதல் இவர் மனித உரிமைக் கமிஷன் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இவரது பதவி நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பிலிப் தாமஸ் என்பவர் ஒருமனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டம் 319 வது பிரிவின் படி தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் பணியாற்றிய ஒருவரை மத்திய,மாநில அரசுப் பணிகளில் நியமிக்கக் கூடாது. ஆனால் அந்த விதிகளுக்கு மாறாக, மனித உரிமைக் கமிஷன்நீதிபதியாக, நீதிபதி சம்பந்தம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எந்த அடிப்படையில் அவர் இந்தப் பதவியில் நீடிக்கிறார் என்று விளக்க வேண்டும். மேலும் அவர் அந்தப்பதவியில் நீடிப்பதற்கு இந்தக் கோர்ட் இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) தொடங்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications