ரயில் கட்டணம் மேலும் உயராது: ரயில்வே அமைச்சர்
குன்னூர்:
இப்போதைக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய ரயில்வே இணைஅமைச்சர் திக்விஜய் சிங் கூறினார்.
சமீபத்தில் தான் லக்கேஜ் மற்றும் பயணிகள் கட்டணம் உயர்த்தப் பட்டது. எனவே இப்போதைக்கு ரயில்கட்டணத்தை மேலும் உயர்த்தும் திட்டம் எதுவும் ரயில்வே அமைச்சகத்திடம் இல்லை.
புதிதாக ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அகல ரயில்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை ரயில்வே அமைச்சகத்தின் எதிர்காலவிரிவாக்கத் திட்டங்கள் ஆகும்.
நாட்டின் தென்பகுதிகள், ரயில்வே அமைச்சகத்தால் புறக்கணிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது முற்றிலும்தவறான கருத்தாகும். மேலும் நாட்டின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதுஇல்லை. எல்லாப் பகுதிகளும் சமம்தான்.
அதிகரித்துவரும் ரயில் விபத்துக்களைத் தவிர்க்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும்ரூ.17,000 கோடி நிதியைத் திரட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிதி இன்னும் 5 ஆண்டுகளில் சேகரிக்கப்படும்.
சென்னையில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம், ஆர்டர் இல்லாமல் முழுமையாக இயங்காமல் உள்ளது. விரைவில் தகுந்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இதற்கான ஆர்டர்கள் பெறப்படும்.
மேலும் "பேலஸ் ஆன் வீல்ஸ்" என்ற நவீன ரக ரயில்களை இயக்க மாநில அரசுகளும் முன்வந்தால்தான், அதைவெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.
மேலும், புதிய நீலகிரி மலை ரயில்வே திட்டத்தை விரைவில் செயல்படுத்த "யுனெஸ்கோ" நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார் திக்விஜய் சிங்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications