காலியானது வெள்ளை மாளிகை
நியூயார்க்:
கடத்தப்பட்ட 3 விமானங்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடங்களையும்,வாஷிங்டனில் உள்ள ராணுவத் தலைமையகமான பென்டகன் கட்டடத்தையும் மோதித் தாக்கியதையடுத்து,அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகை காலியானது.
பென்டகன் கட்டடமும் காலியாகி வருகிறது. மற்றும் அமெரிக்க அரசுக்குச் சொந்தமான கட்டடங்களும் காலியாகிவிட்டன.
மேலும், அமெரிக்காவில் உள்ள உயரமான கட்டடங்களும் காலியாகி வருகின்றன.
இந்தத் தாக்குதல்களை அடுத்து, உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தூதரங்களில் காவல்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் தூதரகங்களில் உள்ளவர்களும் காலி செய்து வருகின்றனர்.
அதுபோல், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீன தூதரகங்களிலும் பலத்த பாதுகாப்புகள்பலப்படுத்தப்பட்டுள்ளன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!