உலகின் மிக உயரமான 10 கட்டிடங்கள்
பாரிஸ்:
செவ்வாய்க்கிழமை நியூயார்க் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விமான தாக்குதலில்110 மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்கள் தரைமட்டமாக இடித்து போயின.இவை உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களின் வரிசையில் 5வது மற்றும் 6வதுஇடத்தை பிடித்துள்ளன.
1 மற்றும் 2. மலேசியா, கோலாலம்பூரில் உள்ளது பெட்ரோனாஸ் டவர்ஸ். இதன்உயரம் 452 மீட்டர். இது தலா 88 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டிடம். 1997ம்ஆண்டு கட்டப்பட்டவை.
3. அமெரிக்கா, சிகாகோவில் உள்ள சியர்ஸ் டவர்ஸ். இது 442 மீட்டர் உயரம்கொண்டது. இது ஒரு 110 மாடிக் கட்டிடம். இது 1974ம் ஆண்டு கட்டப்பட்டது.
4. சீனா, சாங்காயில் உள்ள ஜின் மாவ் டவர்ஸ். இது 421 மீட்டர் உயரம் கொண்டது.இது ஒரு 88 மாடிக் கட்டிடம். இது 1998ம் ஆண்டு கட்டப்பட்டது.
5. அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் -1. இது 417 மீட்டர் உயரம்கொண்டது. இது ஒரு 110 மாடிக் கட்டிடம். இது 1972ம் ஆண்டு கட்டப்பட்டது.
6, அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் -2. இது 415 மீட்டர் உயரம்கொண்டது. இது ஒரு 110 மாடிக் கட்டிடம். இது 1973ம் ஆண்டு கட்டப்பட்டது (இந்தஇரண்டு கட்டிடங்களும்தான் செவ்வாய்க்கிழமை நடந்த விமானத் தாக்குதலில்தரைமட்டமாகின)
7. அமெரிக்கா, நியூயார்க்கில் உள்ளது எம்பயர் ஸ்டேட் கட்டிடம். இது 381 மீட்டர்உயரம் கொண்டது. இது ஒரு 102 மாடிக் கட்டிடம். இது 1931ம் ஆண்டு கட்டப்பட்டது.
8. சீனா, ஹாங்காங்கில் உள்ள சென்ட்ரல் பிளாாசா. இதன் உயரம் 374 மீட்டர் இது 78மாடிக் கட்டிடம். இது 1992ம் ஆண்டு கட்டப்பட்டது.
9. சீனா, ஹாங்காங்கில் உள்ளது பாங்க் ஆஃப் சீனா. இதன் உயரம் 369 மீட்டர். இதுஒரு 70 மாடிக் கட்டிடம். இது 1989ம் ஆண்டு கட்டப்பட்டது.
10. தைவான், கோவ்சிங்கில் உள்ளது டுன்டெக்ஸ் கட்டிடம். இதன் உயரம் 348 மீட்டர்.இது ஒரு 85 மாடிக்கட்டிடம். இது 1998ம் ஆண்டு கட்டப்பட்டது.
சீனா சாங்கையில் கட்டப்பட்டு வரும் உலக நிதி மையம் (வோர்ல்ட் ஃபைனானஸ்சென்டர்) 460 மீட்டர் உயரம் கொண்டது. இது ஒரு 94 மாடிக்கட்டிடமாகும்.இது இந்தஆண்டு கட்டி முடிக்கப்பட உள்ளது. இது கட்டி முடிக்கப்பட்டவுடன் இது தான்உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை பெறும்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications