இந்திய ராணுவ மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு: தயார் நிலையில் போர் விமானங்கள்
பெங்களூர்:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்தியாவின் முக்கிய ராணுவ மையங்களில்பாதுகாப்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போர் விமானங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்ட்டுள்ளன.
மேலும் இராணுவ மையங்கள், ராக்கெட், ஏவுகணை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜன்சி என்ற விமானப்படை ஆராய்ச்சிமையம் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் கோட்டா ஹரிநாராயணன் கூறியதாவது:
தற்போது இந்த நிறுவனத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாரும் அவ்வளவு எளிதாக உளளேநுழைய முடியாதபடி பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கிமான பல ரெக்கார்டுகளின் "டூப்ளிகேட்" பிரதிகள் எடுக்கப்பட்டு அவை ரகசியமான இடத்தில்வைக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் அடிக்கடி, "ஸ்கேன்" செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய உளவு நிறுவனத்தின் குழுக்களும் இந்த நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகிறது என்றார்.
போர்விமானங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் இயக்குநர் கே.கே. முத்தப்பாகூறும்போது:
நிறுவனத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்தப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் உள்ளே வருகின்ற மற்றும் வெளியே செல்கின்ற அனைத்து விமானங்களும் மத்திய தொழில்துறைபாதுகாப்புப்படை (சி.ஐ.எஸ்.எப்), ராணுவம் மற்றும் போலீசாரின் தீவிர சோனைக்குப் பிறகே அனுப்படுகின்றன.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் நம்மைப் போன்ற நாடுகளுக்கு ஒரு விழிப்புணர்ச்சியைஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
இந்த நிறுவனங்கள் தவிர ஏராளமான மத்திய மற்றும் மாநில அரசின் ஆராய்ச்சி மையங்கள், ராணுவப்பிரிவுகள்ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications