பெங்களூரில் உதவி மையங்கள்
பெங்களூர்:
அமெரிக்காவில் நடந்துள்ள தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள தங்கள் உறவினர்களை இந்தியர்கள்தொடர்புகொள்ள பெங்களூரில் சில உதவி மையங்களை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
இந்தியாவில் உள்ளவர்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலையைப் பற்றி அறியவிரும்புவார்கள். இதற்காக கர்நாடக அரசு பல உதவி மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து மனித வளமேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் சாந்தனு கான்சல் கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினரின் நிலைமை பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்த மையங்கள் உதவிசெய்யும். அவர்கள் அமெரிக்காவில் உள்ள தங்கள் உறவினரின் பெயர், அவர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர்,விலாசம் மற்றும் இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை மையத்தில் கொடுக்க வேண்டும்.
இதை வைத்துக்கொண்டு நாங்கள் அங்குள்ள தகவல் தொடர்பு மையத்தில் தொடர்புகொண்டு, உங்களின்உறவினரைப் பற்றிய செய்திகளைத் தெரிவிப்போம்.
உங்களை நாங்கள் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள வேண்டும் என்பதால், உங்களுடைய விலாசம்,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
இந்த மையத்தின் தொலைபேசி எண்: 2253739. இதே எண்ணிலேயே பேக்ஸ் வசதியும் உள்ளது.
இ-மெயில்: [email protected]
இந்த மையங்கள் செப்டம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை செயல்படும் என்றார் சாந்தனு.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications