காவிரி பிரச்சனை: ஜெ. ஏன் பிரதமரைச் சந்திக்கவில்லை? - கருணாநிதி
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா ஏன் பிரதமரையும், கர்நாடக முதல்வரையும் சந்திக்கவில்லை என்றுமுன்னாள் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து காரிவி நீர்ப் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. ஆனால் இதுகுறித்துப் பேசபிரதமரையும், கர்நாடக முதல்வரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. 2 கடிதங்களை மட்டும் எழுதினால் போதுமா?அவர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டாமா?
நெல், அரிசி போன்றவற்றை பிற மாநிலங்களுக்கு அனுப்ப கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளார். 25 ஆண்டுகாலமாக எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் செய்யாததை இவர்கள் செய்யப் போகிறார்களாம். இதன் விளைவைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர் தளவாய் சுந்தரம் டான்சி வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகிவரும்வெங்கடபதியை விமர்சித்துஜனாதிபதிக்கு பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார். அந்தச் செய்தி அனுப்பட்டது அவரது வீட்டிலிருந்துதான்என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது.
அந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு அது அவருடைய வீட்டு எண்தான் என்பதை நாங்கள் உறுதிசெய்துள்ளோம். இந்நிலையில் அவர் என்மீது வழக்குத் தொடர்ந்தால் அதை நாங்கள் சந்திக்கத் தயாராகஇருக்கிறோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications