ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது: அரசு வழக்கறிஞர்
டெல்லி:
மாநில முதல்வரை நியமிக்கும் விஷயத்தில் மாநில ஆளுநர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார்.
புதன்கிழமை தமிழக அரசின் சார்பாக முத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் வாதாடினார்.
"மாநில ஆளுநர் எடுக்கும் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை அரசியல் சட்டத்தின் 361வதுபிரிவு தெளிவாக விளக்கியுள்ளது. எனவே தமிழக ஆளுனராக இருந்த பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்குமுதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி அவர்வாதாடினார்.
நீதிபதிகள் கேள்வி
"ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியல் சட்டத்தால் கூட கட்டுப்படுத்த முடியாத எல்லைகள் கொண்டதா?
அரசியல் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்படாதா யாரை வேண்டுமானாலும் முதல்வராக ஆளுநர் நியமிக்கலாமா?
மன நோயாளி ஒருவரையோ, திவால் ஆனவரையோ அல்லது 25 வயதுக்கு உட்பட்டவரையோ, அயல் நாட்டைச்சேர்ந்தவரையோ கூட முதல்வராக நியமிக்கலாம் என்று கூறுகிறீர்களா?"
இவ்வாறு நீபதிகள் ஜி.பி.பட்நாயக், எஸ்.கே. சபர்வால், ரூமாபால், பிரிஜேஷ் குமார் ஆகியோர் அரசுவழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
பி.பி.ராவ் பதில் வாதம்
இதற்கு பதிலளித்து பி.பி.ராவ் தன் வாதத்தில் கூறியதாவது:
அது கூட சாத்தியமானதுதான். இந்த விஷயத்தில் ஆளுநர் எடுக்கும் நடவடிக்கை குறித்து மாநில சட்டசபையும்,மக்களும்தான் தீர்ப்பு கூற முடியும்.
தனது நடவடிக்கை குறித்து நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற ஆளுநருக்கு அரசியல் சட்டத்தில்கூறப்படவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு வரமுடியாத ஆளுநரின் நடவடிக்கைள் குறித்து விமர்சிப்பதுசரியானதல்ல.
ஆளுநரால் முதல்வராக நியமிக்கப்படுபவர், சட்டசபையின் நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும்என்றுதான் ஆரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது எழுந்துள்ளது போல் பிரச்சனை எழும்போது அதற்கு நீதிமன்றம் மூலமாக இல்லாமல் சட்டசபைமூலமாாகவே தீர்வு காணலாம் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆளுநர் எடுத்த நடவடிக்கை சரியானதா, இல்லையா என்பதை மக்களும், சட்டசபையும்தான் முடிவு செய்யவேண்டும்.
தேர்தலில் பெரும்பான்மை பெற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக ஜெயலலிதாவை முதல்வராகதேர்ந்தெடுத்தார்கள்.அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அவரது இந்த நடவடிக்கை அரசியல்சட்டத்திற்கு எதிரானது அல்ல.
ஜனநாயகத்தில் மக்கள் வழங்கும் தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது அரசியல் சட்டத்தின் கீழ் செயல்படும்ஆளுனரின் கடமை.
5 ஆண்டு காலம் ஆட்சி நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால்அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுனரின் கடமை.
சட்டசபையின் உறுப்பினராக இல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்கலாம். ஆனால் அவர் 6 மாத காலத்திற்குள்சட்டமன்ற உறுப்பினராக ஆனால் மட்டுமே தொடர்து பதவியில் நீடிக்க முடியும் என்று அரசியல் சட்டத்தின் 164(4)வது பிரிவு கூறுகிறது.
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதாஉயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதா பதவி நீக்கம் செய்யப்பட்டால் அந்தநடவடிக்கை நியாயமற்றதாக இருக்கும் என்று வாதாடினார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications