ஜெ. அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும் - அட்டர்னி ஜெனரல்
டெல்லி:
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அவரால்தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல்சோலி சொராப்ஜி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை (செப்.5) நடந்த வாதத்தின்போது, நீதிபதிகள் பெஞ்ச் சராமாரியாகக் கேள்விக் கணைகளைவீசியது. அன்று நடந்த வாதத்தின் விவரம்:
சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வே வாதம்
சொலிசிடர் ஜெனரல் ஹரீஷ் சால்வே மத்திய அரசின் சார்பாக ஆஜராகி வாதாடினார். ஜெயலலிதா முதல்வராகபதவி வகிக்ககூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆதரித்து அவர் வாதாடினார். அவர் தன் வாதத்தில்,
அரசியல் சட்டத்தின்படி ஒருவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இருக்கும் போது அவர்முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ பதவி வகிக்கும் தகுதியையும் இழந்தரவராகிறார். அப்படிப்பட்டஒருவர் அமைச்சராகவோ அல்லது முதல்வராகவோ பதவி வகிப்பது சட்டத்திற்கு புறம்பானது.
அரசியல் சட்டம் 164 (4) பிரிவு எம்.எல்.ஏவாக இல்லாத ஒருவரை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்க 6 மாத காலஅவகாசம் கொடுத்துள்ளது. அந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பது அவர் பதவியில் தொடர்வதற்குமக்களால் எம்.எல்.ஏவாகதேர்ந்தெடுக்கப் படுவதற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் தான்.
தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாதவர் தனது தகுதியின்மையை போக்கிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட காலஅவகாசம் அல்ல என்றார் சால்வே.
நீதிபதிகளின் கேள்விக் கணைகள்
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி பரூச்சா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், சராமாரியாகக்கேள்விக் கணைகளை அனுப்பியது. அவை:
ஜெயலலிதா முதல்வராக பதவி வகிக்ககூடாது என்று தீர்ப்பளித்தால் அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின்நிலை என்ன?
அரசு இதுவரை செயல்படுத்திய திட்டங்கள், செயல்படுத்தவுள்ள திட்டங்களின் நிலை என்ன?
இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடு உண்டு என்றால் அது என்ன?
ஜெயலலிதா முதல்வராக பதவியில் தொடர்வதை தடை செய்தால், அந்தத் தடை நீக்கப்படும் காலம் வரையிலானஇடைக்காலத்தில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?
இதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன?
இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளிக்க அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜிகால அவகாசம் கேட்டுக் கொண்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications