ஆப்கானை தாக்கினாலும் பின் லேடனை பிடிக்க முடியாது: தலிபான்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் கூட, ஒசாமா பின் லேடனை மட்டும் பிடிக்கவே முடியாதுஎன்று தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மீது தீவிரவாதிகள் விமான மூலம் தாக்குதல்நடத்தினர். இதில் 110 மாடிகளைக் கொண்ட 2 உலக வர்த்தக மைய கட்டிடங்கள் தரைமட்டமாகின.அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனும் சேதமடைந்தது.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன்தான் காரணம் என்று அமெரிக்கா கூறிவருகிறது.பின்லேடன் தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு ரகசிய இடத்தில் தங்கியிருக்கிறார்.

இவருக்கு தலிபான் அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ராணுவம்தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணம்பரவலாக நிலவி வருகிறது.

இந்நிலையில் கண்டகாரில் உள்ள தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹய் முத்மயின்செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆப்கான் மீது தாக்குதல் நடத்துவதால் அமெரிக்காவுக்கு எந்த விதமான பயனும் கிடைக்காது. அவர்களால் பின்லேடனை கண்டுபிடிக்கவும் முடியாது. பின் லேடனுக்கும் அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கும் எந்த விதமானதொடர்பும் கிடையாது.

அந்த தாக்குதலில் பின் லேடனுக்கு தொடர்பு இருப்பாதாக ஆதாரங்களுடன் காட்டினால் அவரை நாடு கடத்ததயாராக இருக்கிறோம்.

எங்கள் நாட்டில் உள்ள ராணுவ நிலையங்களையும், பொருளாதார மையங்களையோ அமெரிக்கா தாக்கநினைத்தாலும் அவர்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் எங்களிடம்அப்படிப்பட்ட இடங்களே கிடையாது.

எங்கள் நாட்டை அமெரிக்கா அழிக்க விரும்பினால் அமெரிக்கா மீது உள்ள வெறுப்புதான் மேலும் அதிகமாகும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+