87வது மாடியிலிருந்த தமிழக எஞ்ஜினியர் உயிர் தப்பினார்
சென்னை:
நியூயார்க்கில் தாக்குதலுக்குள்ளான உலக வர்த்தக மையக் கட்டடத்தின் 87வது மாடியில் வேலை பார்த்து வந்த,சென்னையைச் சேர்ந்த பாபு என்ற எஞ்ஜினியிர், அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இவர் அலுவலகம் உலக வர்த்தக மையத்தில் உள்ளது. செவ்யாக்கிழமை தீவிரவாதிகள் உலக வர்த்தக மையத்தின்மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 110 மாடிகள் கொண்ட உலக வர்த்தக மையக் கட்டிடங்கள்இரண்டும் தரை மட்டமாகின.
இந்த சம்பவத்தில் அங்கு பணிபுரிந்து வந்த பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவர் தான் உயிர்தப்பியது குறித்து கூறுகையில்,
நான் பணிபுரியும் அலுவலகம் நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 87வது மாடியில் உள்ளது. நான் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை 8.20க்கு என் வேலையை தொடங்கினேன். 8.45 மணிளவில் பெரிய வெடிச்சத்தம் கேட்டது என்ன என்று யாருக்குமே எதுவுமே புரியவில்லை.
இந்நியிைல் பக்கத்து மாடியில் பணிபுரிந்து வந்தவர்கள் ஓடி வந்து, "கட்டிடம் தீப்பிடித்து எரிகிறது. தப்பி ஓடுங்கள்"என்று கூறினர். அனைவரும் தப்பி ஓடத் துவங்கினோம்.
87வது மாடியிலிருந்து 78ம் மாடிவரை லிப்ட் வேலை செய்யவில்லை. 77வது மாடிவரை படிவழியாக வேகமாகஇறங்கி வந்தோம். 77வது மாடியிலிருந்து லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தோம். அருகிலிருந்த கட்டிடத்திலிருந்தும்பலரும் கீழே இறங்கிவந்து விட்டனர்.
நாங்கள் கீழே இறங்கி 20 நிமிடம் கழித்து மற்றொரு விமானம் உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது மோதியது.அப்போது வெடித்து சிதறிய கண்ணாடி என் மீது விழுந்தது.
எங்கள் கண்ணெதிரிலேயே உலக வர்த்தக மையக் கட்டிடம் நொறுங்கி விழுந்தது. எங்கும் புகை மூட்டம் எதுவுமேதெரியவில்லை.
ரயில்கள் எதுவும் ஓடவில்லை. கஷ்டப்பட்டு ஒரு அமெரிக்கர் உதவியுடன் நியூஜெர்சியில் இருக்கும் என் வீடுபோய்ச்சேர்ந்தேன். பலரும் என் போலவே அமெரிக்கர்களின் உதவியுடன்தான் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
இதற்கிடையே என் மானேஜர், "நான் வீடு வந்து சேர்ந்து வந்துவிட்டேனா? எதாவது தகவல் வந்ததா?" என்றுகேட்டதால், என் மனைவி பயந்து விட்டார். நான் பத்திரமாக இருக்கும் விஷயத்தை, என் நண்பர் ஒருவர் என்மனைவிக்கு சொன்ன பிறகே அவர் பயம் விலகியுள்ளது.
நான் ஐயப்ப பக்தன். நான் வணங்கும் ஐயப்பன்தான் என்னைக் காப்பாற்றினார் என்றார் பாபு.


Click it and Unblock the Notifications
