பாகிஸ்தான் அதிரடி: தலிபன் தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தீவிரவாத்திற்கு எதிராக அமெரிக்க தொடுக்கவிருக்கும் போருக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஆப்கான் ஆளும்கட்சியான தலிபனைச் சேர்ந்த 300 முக்கியஸ்தர்களின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் முடக்கி வைத்துள்ளது.


தாக்குதலுக்குக் காரணமாகக் கருதப்படும பின் லேடன் ஆப்கானில் பதுங்கி இருப்பதால், ஆப்கான் மீது போர்தொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தாக்குதலுக்கு உதவுமாறு பாகிஸ்தானையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. பாகிஸ்தானும் அதற்கு சம்மதித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஆப்கானின் ஆளும் கட்சியான தலிபனைச் சேர்ந்த300 முக்கியஸ்தர்களின் கணக்குகளை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவுக்குபாகிஸ்தான் அளிக்கும் ஆதரவின் முதல் கட்டம் இது என்று கூறப்படுகிறது.

முடக்கி வைக்கப்பட்ட கணக்குகளில் தலிபானின் தற்போதைய மற்றம் முன்னாள் அமைச்சர்கள் மற்றும்கமான்டர்களின் கணக்கும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாகிஸ்தான், பெஷாவரிலிருந்துவெளிவரும் நாளிதழில் கூறப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் (எஸ்.பி.பி) நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஆப்கானைச்சேர்ந்த 300 முக்கியஸ்தர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி கணக்குகள் மறுஉத்தரவு வரும்வரை முடக்கி வைக்கப்பட்டிருக்கும்.

முடக்கி வைக்கப்பட வேண்டிய வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை தனியார்வங்கிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது எஸ்.பி.பி. இவர்களில், ஆப்கானின் தற்போதைய கமான்டர்கள், முன்னாள்கமான்டர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்என்று அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் அதே பத்திரிக்கையில் எஸ்.பி.பிஐச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது பற்றி எனக்கு இதுவரை எதுவும்தெரிய வரவிலில்லை. ஒருவேளை இதுபற்றிய முடிவு இரவு நெடுநேரம் கழித்து எடுக்கப்பட்டிருக்கக்கூடும். இதுகுறித்த ஆணை எதுவும் இதுவரை எனக்கு வரவில்லை. தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+