புனிதப் போருக்கு நாங்கள் தயார்: தலிபான்
டெல்லி:
பின் லேடனை ஒப்படைக்க அமெரிக்கா 3 நாட்கள் காலக்கெடு விதித்திருப்பதை அடுத்து, ஆப்கானிஸ்தானின்தலிபான் அரசு, "புனிதப் போருக்கு நாங்களும் தயார்" என்று கூறி அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ளத்தயாராகி விட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு பின் லேடன்தான் காரணம் என்றுஅமெரிக்கா உறுதியாகக் கூறிவிட்டது. ஆனால், பின் லேடனும் ஆப்கனின் தலிபான் அரசும் தொடர்ந்து இதைமறுத்து வருகின்றனர்.
இதையடுத்து, அமெரிக்காவும் ஆப்கனுக்கு காலக்கெடு விதித்துள்ளது. "பின் லேடனை இன்னும் 3 நாட்களுக்குள்எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்" என்று அமெரிக்காகடுமையான எச்சரிக்கையும் காலக்கெடுவும் விதித்துள்ளது.
ஆப்கன் இன்னும் தன் கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில், இன்னும் 3 நாட்கள் கழித்து நிச்சயம்அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆப்கனும் இதற்குத் தயாராகவே இருப்பது போலத்தான் தோன்றுகிறது. பாகிஸ்தான் எல்லையில்ஆப்கானிஸ்தானும் தன்னுடைய படைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
"இது ஒரு புனிதப் போர்" என்ற வாசகத்துடன், தலிபான் அரசு இத்தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.












Click it and Unblock the Notifications