தீவிரவாத இயக்கங்கள் முஷாரபுக்கு கடும் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்:
ஆப்கான் மீது அமெரிக்க போர் தொடுக்க பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் அறிவித்ததற்கு பல மதவாத தீவிரவாத அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் நடந்துள்ள தாக்குதல்களுக்கு காரணம் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன்தான் என்றுஅமெரிக்க அரசு உறுதிபட கூறியுள்ளது.
இதையடுத்து பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள ஆப்கான் அரசு மீது போர் தொடுக்கவும் அமெரிக்காமுடிவு செய்துள்ளது. அதற்கு பாகிஸ்தானின் ஆதரவை கோரியிருந்தது. பாகிஸ்தானும் அதற்குஅனுமதியளித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு பல மதவாத தீவிரவாத அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாகிஸ்தான்அமெரிக்காவுக்கு ஆதரவளித்தால் நாடு தழுவிய போராட்டம நடைபெறும் என்று அவர்கள் பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரபுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
"ஆப்கான் மீதான அமெரிக்காவின் தாக்குலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தால், பாகிஸ்தான் அரசு தூக்கிஎறியப்படும். அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பது இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும்அது முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து உண்டாக்குவதாகும்" என்று தீவிரவாத அமைப்புகள் கூறியுள்ளன.
ஆப்கான் பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பின் கீழ், 35 முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றன.தலிபன் அரசின் மீது அமெரிக்கா நடத்தவுள்ள போருக்கு பாகிஸ்தான் சனிக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளதைஎதிர்த்து இவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1998ம் ஆண்டு அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பின் லேடனைஅமெரிக்க அரசிடம் ஒப்படைக்க தலிபன் அரசு மறுத்ததால், தலிபன் அரசு மீது ஐ.நா. சபை பொருளாதாரதடைகளை விதித்தது. இதையடுத்து, "ஆப்கான் பாதுகாப்பு கவுன்சில்" இந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த அமைப்பில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜிஹாத் தீவிரவாத குழு, ஜைஷ்-ஈ-முகமது மற்றும்ஹர்காட்-உல்-முஜாஹுதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகள் உள்ளன. இவை எல்லாம் காஷ்மீர் பகுதியில்செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அரசு தலிபன் அரசை அழிப்பதற்காக அமெரிக்காவிடம் மண்டியிட்டுள்ளது என்று இவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடன்தான் காரணம் என்று அமெரிக்கா கூறும் சிறுஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தலிபான் அரசின் மேல் போர் தொடுக்க அனுமதிக்கக்கூடாது என்றும்அந்த அமைப்புகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications