அராபியர் என்று நினைத்து அமெரிக்காவில் சீக்கிய இளைஞர் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலம் - பீனிக்ஸ் நகரில் பல்பீர் சிங் சோதி என்ற சீக்கியரை, அரபு நாட்டைச்சேர்ந்தவர் என்று தவறாக புரிந்து கொண்ட அமெரிக்கர்கள் சுட்டுக் கொன்றனர்.


அமெரிக்காவில் வாழும் அராபியர்கள் மீதும், தெற்காசியர்கள் மீதான அமெரிக்க மக்களின் தாக்குதல் தொடர்ந்துவருகிறது. சீக்கியர்களை அராபியர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு அவர்கள் மீதான தாக்குதலும் தொடர்ந்துவருகிறது.

அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு காரணமான அராபயிர்கள் மீதும், தெற்காசியாவைச் சேர்ந்த மக்கள் மீதும்அமெரிக்க மக்கள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சீக்கியர்களையும் அராபியர்கள் என்று தவறாக புரிந்து கொண்டு, அவர்கள் மீதும் அமெரிக்க மக்கள் தாக்குதல்நடத்துகின்றனர்.

இந்நிலையில், பீனிக்ஸ் நகரில் வசித்து வந்த பல்பிர் சிங்கையும் அரபு நாட்டைச் சேர்ந்தவர் என்று தவறாக புரிந்துகொண்ட அமெரிக்கர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள தொலைக்காட்சிகளில், சீக்கியர்களை காட்டி, "இவர்கள் அராபியர்கள் அல்ல.இவர்கள் மத வழக்கப்படி தாடி வளர்த்து, டர்பன் கட்டிக் கொண்டுள்ளனர். இவர்கள் வேறு மதத்தைச் சேர்தவர்கள்.இவர்கள் ஒசாமா பின் லேடனுக்கோ அல்லது தீவிரவாதிகளுக்கோ ஆதரவாளர்கள் அல்ல" என்று தொடர்ந்துஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சீக்கிய மத கவுன்சிலின் தலைவர் ரஜ்வன்த் சிங் வெளியிட்டுள் அறிக்கையில்,

அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான அரபாயிர்கள், மற்றும் மத்திய கிழக்காசியர்கள் மேல்கோபம் கொண்டுள்ள மக்கள் சீக்கியர்களையும் முஸ்லிம்கள். மத்திய கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து வந்தவர்கள்என்று தவறாக புரிந்து கொண்டு அவர்கள் மேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்களும் அல்ல. முஸ்லிமும் அல்ல. அவர்கள் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள்.அவர்கள் பின் லேடனுக்கோ அல்லது தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களோ அல்ல.

சீக்கியார்கள் கூடி கூட்டுப் பிரார்ததனை நடத்தும் இடத்தை தீ வைத்து கொளுத்த முயற்சித்தனர். இது எங்களுக்குமிகவும் வேதனை அளிக்கிறது.

சீக்கியர்களை கல் வீசி தாக்குவது, அவர்கள் மீது குப்பையை தூக்கி வீசுவது, அவர்களை தள்ளி கீழே விழ வைப்பதுபோன்ற நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சீக்கியர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். இவை எல்லாவற்றை விடவும் சீக்கியர்கள் மீது மக்கள்பகை உணர்வு கொண்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

அமெரிக்க மக்கள் பொறுமைக்கும், புரிந்து கொள்ளுதலுக்கும் பெயர் போனவர்கள். அவர்கள் உலக மக்களால்பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், "இந்திய தம்பதிகளை அமெரிக்க இளைஞர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். அவர்கள் உதவிக்குவந்தவர்களும் தாக்கப்பட்டனர்" என்றும் செய்திகள் வந்துள்ளன. இதேபோல் அராபியர்கள் என்ற சந்தேகத்தில்இரண்டு இந்தியர்கள் ஒரு கும்பலால் அடித்து உதைக்கப்பட்டுள்ளனர்.

பல மதத் தலைவர்களும், "இந்த தாக்குதலை வேறு விதமாக புரிந்து கொள்ள வேண்டாம். இது தவறுதலாகநடத்தப்பட்ட தாககுதல். இதை பெரிது படுத்த வேண்டம்" என்று பத்திரிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+