சீக்கியர் கொலை தொடர்பாக ஒருவர் கைது
நியூயார்க்:
இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பல்பீர் சிங் சோதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.
சீக்கியர்களையும் அராபியர்கள் என்று தவறாக கருதி, அவர்கள் மீதும் தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பல்பீர் சிங் சோதி என்ற சீக்கியர் அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய சீக்கியர். இவரை அராபியர் என்று சந்தேகம் கொண்டஅமெரிக்கர் ஒருவர் பீனிக்ஸ் நகரில் சுட்டுக் கொன்றார்.
கொலை செய்யப்பட்ட சோதிக்கு மனைவியும், 22, 24, 27 வயதில் 3 மகன்களும் உள்ளனர். இவர் 10ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபிலிருந்து அமெரிக்கா வந்து பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
இந்த கொலை தொடர்பாக பிராங்க் ரூக் (வயது 42) என்பவரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.இவர் மீது ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, 3 துப்பாக்கி சூடு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பிராங்க், ஒரு வேன் மூலம் வந்து சோதியை கொன்றுள்ளார். இவர் பெட்ரோல் பங்க்கிற்கு வேன் மூலம் வந்து அங்குவேலை செய்த சோதியை நோக்கி 3 முறை சுட்டார். இதில் சோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
பிராங்க் அங்கிருந்து அடுத்த பெட்ரோல் பங்கிற்கு சென்றார். அதற்கு அருகில் உள்ள கடையில் வேலை செய்துகொண்டிருந்த லெபனான் நாட்டைச் சேர்ந்த கிளார்க் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், கிளார்க்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதன் பின் அருகில் உள்ள வீட்டின் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். இதிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
பணத்திற்காகத்தான் சோதி கொல்லப்பட்டார் என்று முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இது குறித்துஅவரது உறவினர்கள் கூறுகையில், "இது வெறுப்பின் காரணமாக செய்யப்பட்ட கொலைதான். பணத்தைகொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்ட கொலை அல்ல. ஏனென்றால் பணம் எதுவும்கொள்ளையடிக்கப்படவில்லை" என்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications