கட்சியாக மாறியது சிதம்பரத்தின் அமைப்பு
சென்னை:
ப.சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற பெயரில்புதிய அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
த.மா.கா. ஜனநாயகப் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை விஜய சேஷமஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ப. சிதம்பரம் தலைமை வகித்தார்.பேரவை எம்.எல்.ஏக்களான புரசைவாக்கம் ரங்கநாதன், வள்ளல் பெருமான் ஆகியோர் உள்ளிட்ட அனைவரும்கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின்போது த.மாகா. ஜனநாயகப் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து கட்சியின் பெயராக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது. கட்சியின்பொதுச் செயலாளராக ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்திற்குப் பின் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சியாக மாறியுள்ளதன் மூலம்எங்களதுபொறுப்பு அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் இதுவரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியைத்தான்பார்த்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களத்தில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை நிரப்பநாங்கள் யற்சிப்போம்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப எங்களது கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் கூட்டணிவைத்துக் கொள்வோம். எந்த அரசியல் கட்சியையும் நாங்கள் பகையாளியாக பார்ப்பது இல்லை. அனைத்துஅரசியல் தலைவர்களும் எங்களுக்கு நண்பர்களே என்றார் சிதம்பரம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் சிவாஜி கணேசன், மூப்பனார் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications