மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

போடி:

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்று, நிர்வாணமாக தூக்கில் தொங்கவிட்டவரை போலீசார் கைதுசெய்தனர்.

மதுரை அருகே உள்ள முதலக்கம்பட்டியில் வசித்து வருபவர் பால்பாண்டி (வயது 36). இவரது மனைவிமுத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பால்பாண்டியின் நண்பர் காமராஜ் (வயது 40).இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

காமராஜ் கொடுத்த ஐடியாவின்படி தேனி, ஆண்டிப்பட்டி வைகை அணை அருகே டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார்பால்பாண்டி.

வியாபாரம் மிக அமோகமாக நடந்தது. பணக்காரர் ஆனார் பால்பாண்டி. முதலக்கம்பட்டியில் சொந்த வீடு,சொந்தமாக டிராக்டர் என்று அமோகமாக வாழ்ந்து வந்தார்.

ஏற்றம் இருந்தால் இறக்கமும் உண்டுதானே? திடீரென நஷ்டம் வந்தது. கடன் வாங்கி தொல்லைக்கு உள்ளானார்பால்பாண்டி.

இதையடுத்து, தன் மனைவி-குழந்தைகளை முதலக்கம்பட்டியில் விட்டுவிட்டு, போடியில் தனியாக வசித்து வந்தார்பால்பாண்டி.

இந்நிலையில் பால்பாண்டியின் நண்பர் காமராஜ், முத்துலட்சுமியை அடிக்கடி வந்து பார்த்தார். இவர்கள்இருவருக்கும் முன்னரே கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. பால்பாண்டியும் ஊரில் இல்லாததால்இவர்கள் கள்ளத்தொடர்பு தொடர்ந்தது.

இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு பால்பாண்டி முதலக்கம்பட்டி வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளைஅழைத்துக் கொண்டு போடி சென்றார். அங்கு ஒரு வாடகை வீட்டில் அவர்கள் குடியேறினர்.

அங்கும் காமராஜ் வந்து போய்க்கொண்டிருந்தார். பால்பாண்டிக்கு இது தெரியாது. நண்பனை முழுமையாகநம்பினார். அவர். தன் நண்பன் காமராஜுடன் இணைந்து மது குடிப்பது வழக்கம்.

சம்பவ தினத்தன்றும் தன் நண்பனுடன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிவிட்டார் பால்பாண்டி.

நள்ளிரவில் கண் விழித்தார் பால்பாண்டி. அருகே காமராஜை காணவில்லை. ஆச்சர்யமடைந்த அவர் வீட்டுக்குள்சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது.

தன் உற்ற நண்பன் காமராஜும், தன் மனைவி முத்துலட்சுமியும் நிர்வாண நிலையில் இருந்ததைக் கண்டார்.அப்போதுதான் அவர்களுக்கு இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது என்பதை உணர்ந்தார்.

பால்பாண்டிக்கு கோபம் தலைக்கேறியது. வீட்டிற்குள் வேகமாக சென்று அங்கிருந்த நீண்ட பட்டாக்கத்தியைஎடுத்துக் கொண்டு வந்தார்.

உல்லாசத்தில் இருந்த காமராஜையும், முத்துலட்சுமியையும் ஆத்திரம் தீர பட்டாக்கத்தியால் வெட்டினார்.கமாராஜும், முத்துலட்சுமியும் வீடு முழுதும் ஓடினர்.

ஆனால் விடவில்லை பால்பாண்டி. இருவரையும் துரத்து துரத்து என்று துரத்தி அவர்கள் இருவரையும் வெட்டினார்.இதில் காமராஜ் ரத்தம் கொட்ட பிணமானார். முத்துலட்சுமி குற்றுயிரும், குலை உயிருமாக போராடிக்கொண்டிருந்தார்.

இறந்து போன காமராஜை நிரர்வாணமாகவே தூக்கில் தொங்கவிட்டார். உயிருக்கு போராடிய மனைவியையும்தூக்கில் தொங்கவிட முயன்றார்.

ஆனால் இதற்குள் காமராஜும், முத்துலட்சுமியும் போட்ட அலறலைக் கேட்டு அருகிலிருந்த வீட்டிலுள்ளவர்கள்வந்துவிடவே அவரை விட்டு விட்டு பட்டாக்கத்தியுடன் வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

அங்கிருந்து நேராக சென்று கிராம நிர்வாக அதிகாரி தியாகாராஜன் முன் சரண் அடைந்தார். முத்துலட்சுமி உயிருக்குஆபத்தான நிலையில் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

போடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+