இங்கிலாந்திலும் சீக்கியர்கள் மீது தாக்குதல்
லண்டன்:
இங்கிலாந்திலும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அரேபியர்களையும் தெற்காசியர்களையும் சில அமெரிக்கர்கள் வெறுப்புடன் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் இங்கிலாந்திலும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை 16 சீக்கியர்கள்தாக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் 5 லட்சம் சீக்கியர்கள் உள்ளனர்.
ஒரு வயதான சீக்கியரை சிலர் பேஸ்பால் மட்டையால் தாக்கி முகத்தை உடைத்தனர். பிறர் மீது சிறிய அளவில் தான்தாக்குதல்கள் நடந்துள்ளன. சீக்கியர்களைப் பார்த்து திட்டுவது போன்ற செயல்களிலும் சில பிரிட்டிஷ் பிரஜைகள்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் லண்டனில் உள்ள சென்ட்ரல் குருத்வாரா என்ற சீக்கியர்களின் புனிதக் கோயிலில் அமெரிக்காவில்தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இத் தாக்குதலை நடத்தியவர்களுக்குகண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில கலந்து கொண்ட இந்திய துணைத் தூதர் ஹர்தீப் சிங் பூரி (இவரும் சீக்கியரே) பேசுகையில்,அமெரிக்காவில் சீக்கியரைக் கொன்ற சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது. இங்கு சீக்கியர்கள் மீது நடத்தப்படும்தாக்குதலையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். சீக்கிய சமுதாயமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சமூகம் தான்.
சீக்கியர்கள் மீதான தாக்குதலை தடுக்குமாறு லண்டன் போலீசாரிடம் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. அவர்கள்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
சீக்கியர்கள் அமைதியை விரும்புபவர்கள். இங்கிலாந்தில் மட்டும் 5 லட்சம் சீக்கியர்கள வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியைப் பிடித்ததையடுத்து கடந்த சில ஆண்டுகளில் அந் நாட்டில் இருந்துமட்டும் 40,000 சீக்கியர்கள் இங்கிலாந்தில் குடியேறினர் என்றார் பூரி.


Click it and Unblock the Notifications
